பூகம்பமே வருதே! ரிசல்ட் வருவதற்கு முன்பே.. பாமக - பாஜக இடையே மோதல்! சல்லி சல்லியாக நொறுங்குதே
சென்னை: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் இறுதியில் நடத்தப்படலாம் என தகவல் வருவதால், பாமக போட்டியிடும் என அறிவித்திருக்கிறார் ராமதாஸ். ராமதாஸின் இந்த பிளானிங் பாஜக கட்சி உள்ளே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.
பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் அண்மையில் காலியான விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை, மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து ஜூன் 1-ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு அடுத்த ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இது சரியான நேரம் அல்ல.
ஜூன் 1-ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், அதற்கான மனுத்தாக்கல் மே 7-ஆம் நாள் தொடங்கப்பட வேண்டும். தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் அதற்கு முன்பாகவே தொடங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் மூன்றாவது அதிக வெப்பநிலை ஒதிஷா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் தான் பதிவாகி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் கூட கடுமையான வெப்பம் தகிக்கிறது.

தேர்தல் திட்டம்: தமிழ்நாட்டில் மே 4-ஆம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்குவதாகவும், அப்போது 116 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பரப்புரை மேற்கொண்டால் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வெப்பச் சொறி, வேனல் கட்டி, வெப்பப் பிடிப்பு, வெப்பத் தசைவலிப்பு, தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும். இவற்றை விட கொடிய வெப்ப மயக்க நோய் (Heat Stroke) ஏற்பட்டால் உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
(கவனிச்சீங்களா? டிவி முழுக்க முழுக்க மோடிதான்.. திடீரென அதிகரித்த பேட்டிகள்.. என்ன காரணம்?)
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இப்போது எந்த அவசரமும் இல்லை. திமுக சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக கடந்த ஏப்ரல் 8-ஆம் நாள் தான் அறிவிக்கப்பட்டது. அந்தத் தொகுதிக்கு அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தினால் போதுமானது. செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும், அக்டோபர் மாதத்தில் ஹரியானா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் அவற்றுடன் இணைந்து விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தலை நடத்தலாம்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக தீர்மானிக்கக் கூடாது. தமிழக அரசு மற்றும் கட்சிகளுடன் கலந்து பேசி தான் தேர்தல் தேதியை தீர்மானிக்க வேண்டும். ஜூன் 1-ஆம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால், அந்த முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
பாமக பிளானிங்: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் இறுதியில் நடத்தப்படலாம் என தகவல் வருவதால், பாமக போட்டியிடும் என அறிவித்திருக்கிறார் ராமதாஸ். ராமதாஸின் இந்த பிளானிங் பாஜக கட்சி உள்ளே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இருப்பதால், கூட்டணிக்குத் தலைமையான பாஜகவிடம் கலந்தாலோசிக்காமல் எப்படி ராமதாஸ் இப்படி ஒரு முடிவை எடுக்க முடியும் என கேள்வி எழுப்பும் பாஜக, இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடும் என கமலாலயம் தரப்பிலிருந்து குரல் எழுவதால் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே பாஜக-பாமக மோதல் வெடிக்குமோ என பரபரப்பானது.
பாஜகவுக்கு யாரும் எந்த பதிலையும் இடைத்தேர்தல் தொடர்பாக பேசக்கூடாது ; நான் சொல்லும் போது பேசினால் போதும் என தனது கட்சியினரை அமைதிப்படுத்தி வைத்துள்ளாராம் ராமதாஸ். இதற்கிடையே, கூட்டணி இருந்தாலும் உடைந்தாலும் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என தீர்மாணித்துள்ள ராமதாஸ், பாமகவின் வேட்பாளராக, 1980-களில் வன்னியர் சங்கத்தினர் நடத்திய இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிர்த் தியாகம் செய்த குடும்பத்திலிருந்து ஒருவரை நிறுத்த ராமதாஸ் முடிவு செய்துள்ளார் என்கிறது பாமகவின் உள்வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications