"ஸ்பீடு ஸ்பீடு".. முதல்ல இதை பண்ணுங்க.. சீறிய எடப்பாடி.. பின்னாடியே ஸ்டாலின்.. ஒரே தெருவில் "ட்விஸ்ட்"
சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், அதற்கான வியூகங்களை திமுக, அதிமுக கட்சிகள் கையில் எடுத்துள்ளன.. அதில் முக்கியமானது புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆகும்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று கொண்டபோது, அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் ஏப்ரல் 5-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்து, முதல் கையெழுத்தை பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் சென்னையில் அதிமுக மாஜி அமைச்சர் எஸ்டி சோமசுந்தரம் நூற்றாண்டு விழா நடைபெற்றது.. இந்த விழாவில் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் கலந்து கொண்டு பேசினார்..

SDS: அப்போது, "கட்சியில் எத்தனையோ முன்னோடிகள் இருந்தபோதும், அண்ணா, இளைஞர்களான என்னையும், எஸ்டி சோமசுந்தரத்தையும் வேட்பாளராக நிறுத்தினார்., அதிமுக 1967-ல் ஆட்சியை பிடிக்க காரணமே, அவர் அதிக அளவில் இளைஞர்களை வேட்பாளராக நிறுத்தியதுதான்.. அதை எடப்பாடி பழனிசாமியும் நினைவில் கொள்ள வேண்டும்" என்று அட்வைஸ் கூறியிருந்தார். இதையடுத்து, கட்சியில் புதிதாக அதிக அளவில் இளைஞர்களை சேர்க்க அதிமுக மேலிடம் திட்டமிட்டுள்ளது.. அதன்படி, கட்சியில் உறுப்பினர் சேர்க்கை கடந்தவாரம் தொடங்கியது..
டிடிவி + சசி: ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உறுப்பினர் அட்டை புதுப்பித்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. அதிமுகவில், புதிய உறுப்பினர்களையும் பெருமளவில் சேர்க்க முடிவு செய்துள்ளார்களாம்.. அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் 17 லட்சம் உறுப்பினர்கள் இருந்ததாக சொல்லப்பட்டது... அதன் பிறகு ஜெயலலிதா காலத்தில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருப்பதாக அவரே சொல்லி வந்தார்.. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பிளவு ஏற்பட்டுள்ள சூழலில், கட்சி 4 ஆக பிரிந்துள்ளது.. எடப்பாடி பழனிசாமி அணி, ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரன் அணி, சசிகலா தரப்பு என 4 அணிகள் பிரிந்துள்ளன..
அப்ளிகேஷன்: ஆனாலும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரான பிறகு, அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறாராம்.. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.. அதன் அடிப்படையில் ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், பேரூர் கழக கிளை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களிடம் விண்ணப்பங்களை பெற்று வீடு, வீடாக சென்று புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி கொண்டிருக்கிறார்களாம்.
புதிய உறுப்பினர்கள்: இதேபோல் திமுகவிலும் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது... திமுகவில் ஏற்கனவே 1 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

இதில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கடந்த வாரம், உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று டார்கெட் நிர்ணயித்து 234 தொகுதிகளிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.. கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன்-3-ந் தேதிக்குள் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்துவிட வேண்டும் என்று திமுகவினரும் வீடு,வீடாக சென்று ஆட்களை சேர்த்து வருகின்றனர்..
திமுக, அதிமுக என இரு கட்சிகளிலுமே உறுப்பினர்கள் அதிகம் என்பதால், எம்பி தேர்தலை முன்னிறுத்தி அந்த எண்ணிக்கை அதிகரிக்க முனைப்பு காட்டப்பட்டு வருகிறது.. 2 கட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் இந்த உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி உள்ளன.. இதில் மிகப்பெரிய சுவாரஸ்யம் என்னவென்றால், 2 கட்சிகளும் ஒரே தெருவில் சென்று புதிய உறுப்பினர்களை சேர்ப்பதால் 2 கட்சியினர் மத்தியில் பலமான போட்டி ஏற்பட்டுள்ளதாம்..!!












Click it and Unblock the Notifications