தலைமைச்செயலக முற்றுகை பேரணி.. வேலுமுருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சென்னையில் பிரமாண்ட பேரணி நடந்து வருகிறது.
Recommended Video

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சென்னையில் பிரமாண்ட பேரணி நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்ட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் மக்கள் மீது தமிழக அரசு கொடூரமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராடிய மக்களை சுட்டு 14 பேரை தமிழக போலீஸ் கொன்றுள்ளது. இன்னும் 100க்கும் அதிகமான மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்.

தமிழக அரசின் இந்த மோசமான செயலை கண்டித்து தமிழகம் முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. தற்போது சென்னை மெரினா கடற்கரை சாலையில் தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தினார்கள். தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, மே 17 இயக்கம், விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை, திராவிட விடுதலை கழகத்தினர், திருமுருகன் காந்தி, வேல்முருகன் ஆகியோர் இந்த பேரணியை முன்னின்று நடத்தினார்கள். 1000க்கும் அதிகமானோர் இந்த பேரணியை நடத்தினார்கள். இதை தடுக்க போலீஸ் பல ஏற்பாடுகள் செய்திருந்தது.

இதில் போலீஸ் மொத்தம் மூன்று இடங்களில் தடுப்பு அமைத்து இருந்தது. இதில் இரண்டு தடுப்புகளை போராட்டகாரர்கள் தாண்டி சென்றுள்ளனர். இப்போது வரை சேப்பாக்க விருந்தினர் மாளிகை அருகே வந்தனர் . இதையடுத்து அவர்கள் முன்னேறி செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்த இடத்தில் இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. போராட்டக்காரர்கள் எப்படியாவது, தடுப்புக்களை தாண்டி வாலாஜா சாலை வழியாக தலைமைச்செயலகத்தை அடைய திட்டமிட்டனர். கடைசியில் போலீஸ் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலுமுருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமை செயலகத்தை முற்றுகையிட சென்ற போது சோப்பக்கத்தில் விருந்தினர் மளிகை அருகே கைது செய்யப்பட்டனர். கைது காரணமாக போலீஸ் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின் போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனத்திலும் அரசு பேருந்திலும் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications