அம்பத்தூரில் குடும்பம் நடத்த வராததால் ஆத்திரம்.. 11வது மாடியிலிருந்து தள்ளி மனைவி கொலை- கணவர் கைது
மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்
அம்பத்தூர்: தாய் வீட்டிலேயே இருந்துகொண்டு, குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை 11வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூர் சேலைவாயல் பகுதியை சேர்ந்தவர் ராஜ்கண்ணு 37. கும்மிடிப்பூண்டி தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், அம்பத்தூரில் வசித்து வரும் தனது அக்கா சுகுணாவின் மகள் ஜெயசுதாவுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், ஜெயசுதாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதை கணவர் ராஜ்கண்ணு தட்டிக்கேட்டதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஜெயசுதா கோபித்துக்கொண்டு, கொரட்டூர் கெனால் ரோட்டில் 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தன் அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.
இதையடுத்து, ராஜ்கண்ணு பலமுறை ஜெயசுதாவை குடும்பம் நடத்த வீட்டுக்கு வருமாறு அழைத்தபோதும் ஜெயசுதா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.15 மணியளவில், ராஜ்கண்ணு தனது அக்கா சுகுணா வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் ராஜ்கண்ணு, 'உங்கள் மகள் என்னுடன் வந்து வாழ சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அக்கா சுகுணா, ''நீங்கள் இருவரும் ஒருத்தருக்கொருத்தர் பேசி, முடிவுக்கு வாருங்கள்'' என கூறிவிட்டு தனது மகன் கார்த்திக்குடன் ஹாலில் பேசிக்கொண்டிருந்தார்.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தம்பதி இடையே வாக்குவாதமாக மாறி, பின்பு தகராறாக உருவெடுத்தெடுத்து. இந்த தகராறில், ஆத்திரம் அடைந்த ராஜ்கண்ணு மனைவி ஜெயசுதாவை வீட்டின் ஜன்னல் வழியாக 11வது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார்.
ஜெயசுதாவின் அலறல் சத்தம்கேட்டு சுகுணா மற்றும் கார்த்திக் இருவரும் அக்கம் பக்கத்தினருடன் கீழே ஓடி வந்து பார்த்தபோது ஜெயசுதா மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜெயசுதாவை மீட்டு, அண்ணாநகர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயசுதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஜெயசுதாவின் தாய் சுகுணா கொடுத்த புகாரின்பேரில் கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்கண்ணுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications