திருமண நாளில் மதுமிதாவை கொன்ற வெங்கடேசன்... சென்னை பட்டாபிராமில் பரபரப்பு
சென்னையை அடுத்த பட்டாபிராமில் திருமண தினம் அன்று குடும்பத் தகராறில் மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னையை அடுத்த பட்டாபிராமில் திருமண தினம் அன்று குடும்பத் தகராறில் மனைவியை கணவர் கொலை செய்தார்.
ஆவடி பட்டாபிராமி சார்லஸ் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (28)- மதுமிதா (24) தம்பதி. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் பட்டாபிராமில் வசித்து வந்தனர். மதுமிதா தேனாம்பேட்டையில் ஒரு வங்கியில் பணியாற்றி வந்தார்.

வெங்கடேசன் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். திருமண தினமான வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் மதுமிதா சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆத்திரமடைந்த வெங்கடேசன், காய் நறுக்கும் கத்தியால் மதுமிதாவின் வயிற்றில் குத்தியுள்ளார். ஆத்திரத்தில் 3 முறை குத்தியதால் குடல் வெளியே வந்து மதுமிதா மயங்கி விழுந்தார்.
இதில் மதுமிதா இறந்ததாக நினைத்துக் கொண்ட வெங்கடேசன் கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்று அவரும் ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இந்த சப்தம் கேட்டு வீட்டு உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
இதையடுத்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மதுமிதா உயிரிழந்தார். வெங்கடேசனுக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகிறது. திருமண நாள் அன்று கணவன்- மனைவியிடையே ஏற்பட்ட மோதலில் கொலையில் முடிந்த சம்பவத்தால் சோகம் நிலவியது.












Click it and Unblock the Notifications