"மனைவி நல வேட்பு விழா” - கோவில்பட்டியில் மனைவியருக்கு மரியாதை செலுத்திய கணவர்கள்
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி: கோவில்பட்டியில் மனைவியின் மாண்புகளை வெளிப்படுத்தும் வகையிலான மனைவி நலம் பேணும் விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவினை முன்னிட்டு வேலாயுதபுரம் அறிவுத் திருக்கோயிலில் நடைபெற்ற இவ்விழாவிற்கு கணேசன் என்பவர் தலைமை வகித்து, மனைவியின் பெருமையையும், மாண்பையும் குறித்துப் பேசினார்.
கோவில்பட்டி ஏ.எஸ்.பி. முரளிரம்பா முன்னிலை வகித்து விழாவினை சிறப்பித்தார். தினந்தோறும் நமக்காக உழைக்கின்ற மனைவியருக்கு நன்றி செலுத்தும் ஒரு விழா என்று அவர் தெரிவித்தார்.
இதில் திரளான தம்பதியினர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மனைவி நல வேட்பு மற்றும் தம்பதியினரின் கனி மற்றும் மலர் பரிமாற்றம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications