“வாடி வாசல் திறக்க முடிந்த நம்மால்... நெடுவாசல் திட்டத்தை மூடவும் முடியும்” அசத்தும் ஓட்டல் வாசகம்
“வாடி வாசல் திறக்க முடிந்த நம்மால்.. நெடுவாசல் திட்டத்தை மூடவும் முடியும்” என்று ஓட்டல் ஒன்றில் மெனு பலகையில் நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு வாசம் எழுதி வைத்து அசத்தியுள்ளனர்.
சென்னை: புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரவருக்கு தெரிந்த வகையில் போராட்டங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது.
சென்னை தேனாம்பேட்டை சிக்னல் அருகில் நீண்ட காலமாக இயங்கி கொண்டிருக்கும் ஓட்டல் ஆனந்தா அதற்கு தெரிந்த வகையில் ஹைட்ரோ கார்பன் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேனாம்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டுமே தெரிந்த இந்த ஓட்டல் போராட்டங்களுக்கும் பெயர்போனது.

பொங்கல் நேரத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாக போராட்டம் வெடித்த போது, அதனை ஆதரித்து வாசகங்களை எழுதி வந்தது இந்த ஓட்டல் நிர்வாகம். தற்போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டங்கள் கடந்த 11 நாட்களாக நடந்து வரும் வேளையில், தங்களது எதிர்ப்பை ஓட்டல் நிர்வாகம் தங்களது மெனு பலகையில் எழுதி வைத்து அசத்தி வருகிறது.
"வாடி வாசல் திறக்க முடிந்த நம்மால்... நெடுவாசல் திட்டத்தை மூடவும் முடியும்..." என்ற வாசகத்தை தலைப்பாக முதலில் எழுதிவிட்டு பின்னர், வெண் பொங்கல், ரவா கிச்சடி, குழிப்பணியாரம் என்ற ஓட்டலில் மாலை நேர சிறப்பு உணவுகளை பட்டியலிட்டுள்ளது இந்த ஓட்டல் நிர்வாகம்.












Click it and Unblock the Notifications