அதிமுகவில் நான் நீடிக்கிறேன்- ஆயுர்வேத சிகிச்சையில் இருக்கிறேன்: நாஞ்சில் சம்பத்
அம்மா மறைந்த துயரத்தில் இருந்து நான் இன்னும் மீண்டு வரவில்லை , அதிமுகவில் இருந்து நான் விலகவில்லை என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் இருந்தும் அரசியலில் இருந்தும் நாஞ்சில் சம்பத் விலக இருப்பதாக சமூத வலைதளங்களில் தீயாக தகவல் பரவியது. அந்த தகவல் வெறும் வதந்தி எனவும், முழுப்பொய் எனவும் அவரது மகள் மதிவதனி மறுப்பு தெரிவித்திருந்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அடுத்த நிலையில் தொண்டர்களால் மதிக்கப்பட்டவர். தமிழகம் முழுவதும் பல்வேறு கூட்டங்களில் கட்சிக்காக பேசியவர். பல போராட்டங்களிலும் பங்கேற்றார். இந்நிலையில், வைகோவுக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே, கடந்த 2012ம் ஆண்டு மதிமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து கட்சியில் பொறுப்பு கொடுத்ததோடு, இன்னோவா காரும் பரிசளித்தார் ஜெயலலிதா.

நாஞ்சில் சம்பத்
கடந்த வெள்ளத்தின் போது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இது குறித்து தொலைக்காட்சியில் பேட்டியளித்தார் நாஞ்சில் சம்பத், அப்போது துணை கொள்கை பரப்புச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அதிமுகவின் செய்தி தொடர்பாளராக நீடித்தார் நாஞ்சில் சம்பத்.

ஜெயலலிதா மறைவு
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் நாஞ்சில் சம்பத் ஊடகங்களில் முகம் காட்டவில்லை, பேட்டியும் தரவில்லை. இதனையடுத்து அவர் அதிமுகவை விட்டு விலகி திமுகவில் இணையப் போவதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இதற்கு நாஞ்சில் சம்பத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகவில்லை
சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா மறைந்த துயரத்தில் இருந்து நான் இன்னும் மீண்டுவரவில்லை, அந்த துயரம் இன்னும் என்னை துரத்தி கொண்டே தான் இருக்கிறது. ஒருவர் மறைந்தால் அது ஈடு செய்ய முடியாத இழப்பு என்று என்று வழக்கமாக சொல்வது உண்டு அனால் அதை என் வாழ்நாளில் இப்போதுதான் அம்மாவின் மறைவின் மூலம் உணர்கிறேன். இந்த நிலையில் என்னை குறித்து வரும் தவறான தகவல்கள் ஊடகங்களில் வந்து கொண்டு இருக்கிற செய்திகள் உண்மை இல்லை.

ஆயுர் வேத சிகிச்சை
உடல் நலிவுக்கான ஆயுர்வேத சிகிச்சையில் உள்ள நான் சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் வரை எந்த ஊடகங்களிலும் நான் முகம் காட்டவிரும்பவில்லை, அதிமுகவில் நான் நீடிக்கிறேன் அதனால் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து நடிகை விந்தியா விலகிவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து இதுவரை விந்தியா எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications