அதிமுக அணிகள் இணைப்பா... அப்படி ஒன்றும் தெரியவில்லையே... டிடிவி தினகரன் பதில்
அதிமுக அணிகள் ஒன்றாக இணைவது தொடர்பாக எந்த அறிகுறியும் தெரியவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி: ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்து அதிமுக ஒன்றாக செயல்படும் வாய்ப்புகளின் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார். வந்தவுடன் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்து அதற்கான வேலைகளில் அதிக கவனம் செலுத்திவருகிறார்.

இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் சாலை மார்க்கமாக சென்னையிலிருந்து புறப்பட்டுள்ளார்.
பெங்களூரு செல்லும் வழியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு தினகரன் அளித்த பேட்டியில், "அதிமுகவில் உள்ள அணிகள் இணைவதாக எந்த அறிகுறியும் தெரியவில்லை. எனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்து ஆலோசித்து, அவர் என்ன சொல்கிறாரோ அதன்படியே நான் செய்ய உள்ளேன்.
அதற்காகவே இப்போது பெங்களூரு செல்கிறேன். என்னைப்பற்றி சில அமைச்சர்கள் கூறியுள்ளது அவர்களின் சுயநலத்தை வெளிப்படுத்தியுள்ளது. தொண்டர்கள் எனக்கு உற்சாகம் தருகிறார்கள். சென்னையில் இருந்து எனக்கு வழி நெடுக எனக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்து வருகிறார்கள்" என்று கூறினார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications