குழந்தைகள் இறந்தபோதும் வருத்தமில்லை.. சுந்தரத்துடன் ஜாலியாக இருக்கவேண்டும் என்றே தோன்றியது: அபிராமி

குழந்தைகள் இறந்தபோதும் கொஞ்சம் கூட வருத்தமே இல்லை என கைது செய்யப்பட்டுள்ள அபிராமி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமியின் அதிரடி வாக்கு மூலம்

    சென்னை: குழந்தைகள் இறந்தபோதும் கொஞ்சம் கூட வருத்தமே இல்லை, சுந்தரத்துடன் ஜாலியாக வாழவேண்டும் என்றுதான் தோன்றியது என கைது செய்யப்பட்டுள்ள அபிராமி தெரிவித்துள்ளார்.

    கள்ளக்காதலனுடன் வாழ இடையூறாய் இருந்த குழந்தைகளை கொன்றதன் மூலம் பெரும் பிரபலமாகிவிட்டார் குன்றத்தூர் அபிராமி.

    கணவரையும் கொல்ல கள்ளக்காதலனுடன் அவர் தீட்டிய சதித்திட்டம் தோல்வியடைந்தது. பணி நிமித்தமாக கணவர் இரவு அலுவலகத்திலேயே தங்கியதால் மயிரிழையில் மனைவியின் கொலை வெறியாட்டத்தில் இருந்து தப்பினார் விஜய்.

    30ஆம் தேதி முதல்

    30ஆம் தேதி முதல்

    30 ஆம் தேதி முதலே குழந்தைகளை கொலை செய்யும் பணியில் இறங்கினார் அபிராமி. 30 ஆம் தேதி இரவு கணவர், மகள், மகனுக்கு கொடுத்த பாலில் தலா 5 மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார்.

    மூச்சை நிறுத்தி

    மூச்சை நிறுத்தி

    இதில் 4 வயது மகள் இறக்கவே, மறுநாள் காலையில் கணவர் வேலைக்கு சென்ற பிறகு 8 வயது மகனை வாய் மற்றும் மூக்கை பொத்தி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார் அபிராமி.

    கையும் களவுமாக கைது

    கையும் களவுமாக கைது

    குழந்தைகளை கொன்ற கையோடு நாகர்கோவில் சென்ற அவரை, கள்ளக்காதலன் சுந்தரத்தை வைத்து கையும் களவுமாக பிடித்தனர் போலீசார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொஞ்சமும் சலனம் இல்லாமல் பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார் அபிராமி.

    இரண்டு குழந்தைகள்

    இரண்டு குழந்தைகள்

    அவர் கூறியிருப்பதாவது, என் கணவர் விஜய் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். எங்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற மகளும் இருந்தனர்.

    பிரியாணி ரொம்ப பிடிக்கும்

    பிரியாணி ரொம்ப பிடிக்கும்

    குன்றத்தூர் கெங்கையம்மன் கோயில் தெருவில் பிரியாணி கடை ஊழியரான சுந்தரம் என்பவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. எனக்கு பிரியாணி என்றால் உயிர். இதனால் அடிக்கடி ஓட்டலில் இருந்து பிரியாணி ஆர்டர் செய்து, வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுவேன்.

    படுக்கை வரை சென்ற பழக்கம்

    படுக்கை வரை சென்ற பழக்கம்

    சுந்தரம்தான், வீட்டுக்கு பிரியாணியை எடுத்து வருவார். என்னிடம் இருந்த அன்பு காரணமாக ஒவ்வொரு முறையும் கூடுதலாக பிரியாணி கொண்டு வருவார். எங்கள் நட்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ஏற்பட்டது. அந்த நட்பு படுக்கை வரை சென்றது.

    ஆசையோடு செல்வேன்

    ஆசையோடு செல்வேன்

    மேலும், என் கணவர் இரவு பணி என்று அடிக்கடி சென்றுவிடுவதால், என் இளமை என்னை தூங்க விடவில்லை. மேலும் நான் இரவில் என் கணவரை ஆசையோடு நெருங்குவேன். ஆனால் அவர் என்னை கண்டுகொள்ளவில்லை.

    என் இளமையை ரசித்தார்

    என் இளமையை ரசித்தார்

    ஆனால் என்னை பார்க்கும் போதும் போனில் பேசும்போதும் என் இளமையை ரசித்து, அடிக்கடி என்னை வர்ணித்தார் சுந்தரம். இதனால் என்னையே சுந்தரத்துக்கு கொடுத்தேன். சுந்தரத்துக்கும் என்னை பிடித்ததால் அடிக்கடி இருவரும் உல்லாசம் அனுபவித்தோம்.

    கொன்றால்தான் ஜாலி

    கொன்றால்தான் ஜாலி

    எங்கள் நெருக்கத்தை தெரிந்த என் அப்பா, என்னை வீட்டு சிறையில் வைப்பதாக உணர்ந்தேன். கணவர் விஜய் மற்றும் குழந்தைகள் அடிக்கடி என்னை சுற்றி சுற்றியே வந்தனர். இதுகுறித்து சுந்தரத்திடம் தெரிவித்தேன். அவர் மூன்று பேரையும் கொலை செய்தால்தான் நாம் ஜாலியாக இருக்க முடியும் என்றார்.

    இறந்திருப்பார்கள் என நினைத்தேன்

    இறந்திருப்பார்கள் என நினைத்தேன்

    அதற்கான ஐடியா மற்றும் தூக்க மாத்திரைகளை வாங்கி தந்தார். எனவே, கடந்த 30ம் தேதி இரவு பாலில் 5 தூக்க மாத்திரைகளை கலந்து கணவர் மற்றும் 2 குழந்தைகளுக்கும் கொடுத்தேன். மறுநாள் அதிகாலையில் 3 பேரும் இறந்திருப்பார்கள் என்று நினைத்தேன்.

    உயிர் பிழைத்த மகன்

    உயிர் பிழைத்த மகன்

    ஆனால், கணவன் மற்றும் மகன் அஜய் ஆகியோர் சாகவில்லை. ஆனால், பெண் குழந்தை கார்னிகா படுக்கையிலேயே வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தாள். வேலைக்கு போகும் முன், தன் பெண் குழந்தைக்கு முத்தம் கொடுக்க கணவர் விஜய் அவள் அறைக்கு செல்ல முயன்றபோது அதை அபிராமி தடுத்து, நீங்கள் குழந்தைக்கு முத்தம் கொடுக்க வேண்டாம் என்றேன். அதனால் விஜய் குழந்தைகளுக்கு முத்தம் கொடுக்காமல் வேலைக்கு சென்றார்.

    வாய் மூக்கை பொத்தி

    வாய் மூக்கை பொத்தி

    அவர் பின்னாலேயே சென்ற மகன் அஜய் கீழ் தளத்திற்கு சென்று ஹெல்மெட்டை கொடுத்து தந்தையை வழியனுப்பி வைத்தான். திரும்பி வந்த மகனை படுக்கை அறைக்கு அழைத்து சென்று மூக்கையும், வாயையும் பொத்தி துடி துடிக்க கொன்றேன்.

    கொஞ்சமும் வருத்தம் இல்லை

    கொஞ்சமும் வருத்தம் இல்லை

    பின்னர் குழந்தைகளின் சடலத்தையும் படுக்கை அறையில் அருகருகே கிடத்திவிட்டு, இரவு நேரம் நெருங்கி விட்டதால் கணவரின் வருகைக்காக காத்திருந்தேன். அவரை கொலை செய்யும் முடிவில் இருந்தேன். என் அருகிலேயே குழந்தைகள் இறந்து கிடந்தும் எனக்கு வருத்தம் ஏற்படவில்லை.

    சுந்தரத்துடன் ஜாலியாக..

    சுந்தரத்துடன் ஜாலியாக..

    எப்படியாவது சுந்தரத்துடன் எங்கேயாவது சென்று ஜாலியாக வாழ வேண்டும் என்றுதான் தோன்றியது. கணவர் காலையில் வந்தால் நான் சிக்கிக் கொள்வேன் என்பதால் இது குறித்து சுந்தரத்திடம் கேட்டேன். உடனே சுந்தரம் தன் வீட்டிற்கு என்னை அழைத்தார். இரவு முழுவதும் நானும் சுந்தரமும் ஒதுக்குபுறமான ஒரு இடத்தில் உல்லாசமாக இருந்தோம். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார் அபிராமி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+