நான் அரசியலுக்கு வந்து விட்டேன்... வெளியே போகமாட்டேன் - கமல் பளிச்!
நான் அரசியலுக்கு எப்போதோ வந்து விட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன் என்றும் இனிமேல் வெளியே செல்ல மாட்டேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்தார். ஹேஸ்டேக் அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
பல ரசிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் சில ரசிகர்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என்றும் கூறுகிறார்களே என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அரசியலை தொடங்கி விட்டேன்
நான் அரசியலுக்கு வந்து விட்டேன். வரவா? வேண்டாமா? என்று கேட்பதற்கான மேடையல்ல. நான் அரசியலுக்கு எப்போதோ வந்து விட்டேன். இதிலிருந்து வெளியே போக மாட்டேன் என்று கூறினார்.

அரசியல் அதிக கஷ்டம்
நேர்மையற்றவர்களுக்கு உங்கள் கட்சியில் இடமிருக்குமா என்று கேட்ட கேள்விக்கு, நிச்சயமாக செய்ய வேண்டியதை உடனே செய்ய வேண்டும் என்றார். என்ன செய்யணுமோ அதை செய்வேன் அதை செய்யாமல் விட்டதால்தான் இங்கே வந்து நிற்கிறோம். சினிமா எடுப்பதே மிகவும் கஷ்டம். நான் எடுக்கும் திரைப்படம் உலகத்தரத்திற்கு இருக்க வேண்டும்
அரசியல் அதை விட மிக சிரமமானது என்றார்.

நேர்மையற்றவர்களுக்கு இடமில்லை
பழைய பேக்கேஜ்களுக்கு இங்கே இடமில்லை. நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் என் கனவு என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார். ஏற்கனவே ஊழலில் சிக்கியவர்களுக்கு இங்கே இடமில்லை என்றும் கூறினார்.

காயப்படுத்த மாட்டேன்
யாரையும் காயப்படுத்துவது என் பணியல்ல என்று கூறியுள்ள நடிகர் கமல், தானும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான் என்றார். என்னை இந்து விரோதி என்று கூறுகிறார்கள். நான் பிறந்தது நான் பிராமண சமூகத்தில்தான். என் பெற்றோர், உறவினர்கள் அனைவரும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதை யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications