உன்னிப்பாக பார்த்த ரஜினி.. பெருமைப்படுவதாக சொன்ன கமல்!
தன் படங்களையும் ரஜினிகாந்த் உன்னிப்பாக பார்க்கிறார் என்பது தனக்கு பெருமை என்று நடிகர் கமல் ஹாசன் கூறினார்.
Recommended Video

சென்னை: எனது படங்களையும் ரஜினிகாந்த் உன்னிப்பாக பார்க்கிறார் என்பது எனக்கு மிகவும் பெருமை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
பிக்பாஸ் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 15 போட்டியாளர்கள் இருந்தனர். இவர்களில் புதுவரவுகளாக 4 பேர் வந்தனர். இந்த 19 பேரில் ஸ்ரீயும், பரணியும் ஓவியாவும் மட்டும் அவர்களாவே வெளியேறி விட்டனர்.
மற்ற போட்டியாளர்களை பொதுமக்கள் வாக்களித்ததன் மூலம் வெளியேற்றப்பட்டனர். பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சி முடிவடைதற்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் போட்டி மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. நேற்று 85ஆவது நாள் எபிசோடில் நடிகர் வையாபுரி வெளியேற்றப்பட்டார்.

கலகலப்பானவர்
பிக்பாஸ் வீட்டிலேயே மிகவும் கலகலப்பாக இருந்தவர் வையாபுரிதான். அவரும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் என்னவோ அவர் கேமரா முன்பு வீட்டுக்கு போகனும் என்று அழுது கொண்டே இருப்பார்.

நாளடைவில் சரியாகிவிட்டார்
நாளடைவில் அவர் தனது அழுகையை நிறுத்திக் கொண்டு கலகலப்பாக போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார். இந்நிலையில் நேற்று எலிமினேஷன் லிஸ்டில் அவரது பெயர் இருந்தபோது அவர் கண்ணீருடனேயே போட்டியாளர்களிடம் இருந்து விடை பெற்றார்.

கமலுடன் கலந்துரையாடல்
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மேடைக்கு வந்த வையாபுரியிடம் கமல் நிகழ்ச்சியின் அனுபவங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது கமல் மீதான தனது பற்றை விளக்கும் போது வையாபுரி கூறுகையில், ரஜினி வீட்டுக்கு நான் குடும்பத்தினருடன் சென்றபோது என்னை பார்த்த ரஜினி, என்னுடன் ஒரு படம் கூட செய்யவில்லை என்றும், ஆனால் நீங்கள் கமலுடன் நடித்த படங்களை பார்த்துள்ளதாக அவர் கூறியதாகவும், பூவுடன் சேர்ந்து நாரும் மணக்கும் என்பது போல் அது இருந்தது எனக்கு பெருமை என்றார்.

ரஜினி பார்த்தது எனக்கு பெருமை
அதற்கு உடனே கமல் இதில் இன்னொரு பெருமையும் உண்டு. அதாவது ரஜினிகாந்த் என்னுடைய படங்களை உன்னிப்பாக பார்த்திருக்கிறார் என்பதால் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்றார் கமல். அதை கேட்டதும் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது.












Click it and Unblock the Notifications