ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தயார்... டிடிவி தினகரன் ரெடி
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
திருச்சி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து சசிகலா முடிவெடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீரங்கத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக அம்மா அணி சார்பில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதனை மறைத்தும், மறந்தும் விட்டு மேடை போட்டு எதையோ பேசி வருகிறார்கள். அரசு செலவில் எடப்பாடி பழனிசாமி கதை கூறிவருகிறார். இதனை பொது மக்கள் நம்ப தயாராக இல்லை.
தற்போது கட்சியினர், தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல, மக்கள் மத்தியிலும் ஓபிஎஸ் யார் என்று தெரிந்து விட்டது. சட்டமன்ற கூட்டத் தொடரின் மூலம் எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். இந்த டிசம்பர் மாதத்துக்குள் அனுப்பிவிடுவோம்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நான் போட்டியிட தயாராக உள்ளேன். ஆனால் பொதுக்குழு, உயர்மட்டக் குழு கூடி முடிவு செய்து, வேட்பாளர் யார் என்பதை பொதுச்செயலாளர் சசிகலா அறிவிப்பார். தேர்தல் அறிவிப்பு வந்தவுடனே எங்களது தொண்டர்கள் வெற்றிக்காக பாடுபட தொடங்கி விட்டார்கள்.
நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவரது கருத்தை மதிக்கிறேன். அதேவேளையில் அனைவரும் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையை ஏற்று செயல்படவேண்டும்.
நீட் தேர்வுக்கு எதிராக பொதுக் கூட்டம் நடத்த அனுமதி மறுத்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் நேற்றே நிலவேம்பு கசாயம் வழங்க இருந்தோம். ஆனால் இன்றுதான் அனுமதி வழங்கினர் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications