தேச துரோக வழக்கில் என்னை கைது செய்யட்டும் சட்டப்படி சந்திப்பேன் - தினகரன் சவால்
தன்மீது பொய் வழக்கு போடப்படுவதாகவும், தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டால் அதனை சட்டரீதியாக சந்திப்பேன் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: தேச துரோக வழக்கில் தன்னை கைது செய்தால் அதனை சட்டரீதியாக சந்திக்க தயாராக இருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என்றும் தினகரன் கூறியுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த பிரசுரங்களில் தினகரன் உள்ளிட்ட அம்மா அணி ஆதரவாளா்களின் பெயா் இடம் பெற்றிருந்ததாலும், இவற்றை டிடிவி தினகரன் தான் விநியோகம் செய்யச் சொன்னாா் என்ற குற்றச்சாட்டாலும் தினகரன் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தினகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வந்தன. இது தொடா்பாக டிடிவி தினகரன் இன்று செய்தியாளா்களை சந்தித்து விளக்கமளித்தாா்.

தேச விரோத வார்த்தைகள் இல்லை
தன்மீது பொய் வழக்கு போட்டிருப்பதாக கூறிய தினகரன், சேலத்தில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த நோட்டீசில் அப்படி ஒன்றும் தேச விரோத வார்த்தைகள் இல்லை.

எதிரிகளின் கைகளில் சட்டம்
எடப்பாடி பழனிச்சாமியின் வற்புறுத்தலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதற்கான பலனை போலீசார் அனுபவிப்பார்கள். எங்கள் எதிாிகள் தங்கள் கையில் சட்டம் உள்ளது என்பதற்காக வரம்புமீறி செயல்படுகின்றனா். அவா்கள் நிச்சயம் தண்டனைக்கு உட்படுத்தப்படுவாா்கள்.

சட்டப்படி சந்திப்பேன்
இந்த வழக்கை நான் பின் வாங்குவதாக இல்லை. என்மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்த வகையில் எதிாிகள் தாங்களாகவே வந்து எங்களிடம் மாட்டிக்கொள்கின்றனா். தேச விரோத வழக்கில் என்னை கைது செய்யட்டும், அதனை சட்டரீதியாக சந்திப்பேன் என்றும் தினகரன் கூறினார்

பேய்கள் ஆட்சி செய்கின்றன
பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் என்பது போல தற்போதய ஆட்சி நடக்கிறது என்றும் தினகரன் தெரிவித்தார். எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்றும் தினகரன் தெரிவித்தார்.

தலைமறைவாக வாழவில்லை
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் இருக்கிறார். அவரை பார்ப்பதற்காக நான் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அதற்குள் நான் தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நான் சாதாரணமாகதான் வாழ்ந்து வருகிறேன்.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications