எந்தச் சூழ்நிலையிலும் சசிகலாவுடன் இணைந்து பணியாற்றமாட்டேன் - தீபா அதிரடி
வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி எனது பொது வாழ்க்கை முடிவு குறித்து அறிவிப்பேன் என தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை: எந்தச் சூழ்நிலையிலும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுடன் இணைந்து அரசியல் பணியாற்றும் சூழல் இல்லை என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
அண்ணாவின் 48வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் சென்னை, தி.நகரிலுள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகளான தீபா. அப்போது அவர் கூறுகையில், நான் பொதுவாழ்வில் ஈடுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுத்து வருகின்றனர்.
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சமாதியில் அஞ்சலி செலுத்த சென்றேன். ஆனால், எனக்கு முதலில் போலீஸ் அனுமதி அளிக்கவில்லை. விரைவில் தொண்டர்களை சந்திக்க திமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். சுற்றுப்பயண அறிவிப்பு விரைவில் வெளியாகும். தொண்டர்களை நான் சந்திப்பதை அதிகாரத்தில் உள்ள சிலர் தடுக்க முயல்கின்றனர் எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விவகாரங்களில் முதல்வர் பன்னீர்செல்வத்தின் செயல்பாடு நன்றாக உள்ளது. ஆர்.கே. நகர் தொகுதியில் மீண்டும் ஒருமுறை சுற்றுப்பயணம் செய்து மக்களின் கருத்தை கேட்டறிவேன். எந்தச் சூழ்நிலையிலும் சசிகலாவுடன் இணைந்து அரசியல் பணியாற்றமாட்டேன். வரும் பிப். 24ல் எனது பொது வாழ்க்கை முடிவை அறிவிப்பேன் என்றார்.
-
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications