நானும் அதிமுக அரசை விமர்சித்துள்ளேன்.. என் நாக்கை அறுப்பாங்களா? மத்திய அமைச்சர் கேள்வி!
அதிமுக அரசை நானும் விமர்சித்துள்ளேன் அதனால் என் நாக்கையும் அறுத்துவிடுவார்களா என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: அதிமுக அரசை நானும் விமர்சித்துள்ளேன் அதனால் என் நாக்கையும் அறுத்துவிடுவார்களா என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்றார். அப்போது பேசிய அவர் அதிமுக அரசை விமர்சிப்பவர்களை சரமாரியாக சாடினார்.
[ திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி ]
யாரைப்பார்த்து லஞ்ச ஆட்சி என்கிறாய், குற்ற ஆட்சி என்கிறாய், தவறாய் பேசுகிறாய். தப்பாய் பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம். ஜாக்கிரதையாக இருங்கள்.

பெரும் சர்ச்சை
இது உத்தமர் ஆட்சி. ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார் துரைக்கண்ணு. அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மத்திய அமைச்சர் கண்டனம்
அவரது பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெட்டுவேன் குத்துவேன்
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நாக்கை அறுத்துவிடுவேன், மூக்கை அறுத்துவிடுவேன் என்றெல்லாமா பேசுவது? வெட்டுவேன், குத்துவேன் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்களே.

என் நாக்கை அறுப்பாங்களா?
அப்படியென்றால், நானும்தான் அதிமுக அரசை விமர்த்துப் பேசியிருக்கிறேன். குற்றம் சொல்லிப் பேசியிருக்கிறேன். என் நாக்கை அறுத்துவிடுவார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications