அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வலது காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் இன்றே வீடு திரும்பினார்.
திமுக தலைவராக ஸ்டாலின் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து தொடர்ந்து, தீவிர கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
[ பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் உயர்வு.. வாகன ஓட்டிகள் பெரும் அவதி! ]

அப்போலோ மருத்துவமனை
இந்நிலையில், அவருக்கு நேற்றிரவு திடீர் உடல் நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை
சிறுநீரக தொற்று காரணமாகவே ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவர்கள் நேற்றிரவு முதல் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சிறிய அறுவை சிகிச்சை
இந்நிலையில் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று மதியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வலதுகாலில் இருந்த சிறிய கட்டியை அகற்ற வேண்டி இருந்தது. அதன்படி அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்து வலது காலில் இருந்த கட்டி அகற்றப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் ஸ்டாலின் இன்று பிற்பகல் வீடு திரும்புவார்" என தெரிவிக்கப்பட்டது.

வீடு திரும்பினார்
அதன்படி, மு.க.ஸ்டாலின் மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாா். முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளா் வைகோ நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றார். தற்போது ஸ்டாலினுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அடுத்த 2 அல்லது 3 தினங்களுக்கு பெரிய அளவிலான விழாக்களில் கலந்து கொள்ள மாட்டாா் என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications