ஜெ., சொத்துக்களுக்கு நானும், தீபக்கும் மட்டுமே நேரடி வாரிசுகள் - ஹைகோர்ட் கதவை தட்டிய தீபா
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக அறிவித்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபா மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் நாங்கள்தான், எனவே போயஸ்கார்டன் வீட்டை நினைவிடமாக மாற்றக்கோரிய அரசின் உத்தரவை ரத்து செய்யுங்கள் என்று தீபா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

எனது பாட்டி சந்தியா போயஸ் கார்டனில் வேதா நிலையம் என்ற வீட்டை விலைக்கு வாங்கினார். அந்த வீட்டில் தான் எனது தந்தை ஜெயராமனும், அத்தை ஜெயலலிதாவும் வசித்தனர்.
பாட்டியின் மறைவுக்கு பிறகு இந்த வீடு அத்தை ஜெயலலிதா பெயருக்கு மாற்றப்பட்டது. நானும் எனது தம்பி தீபக்கும் படிப்புக்கு தி.நகர் வீட்டுக்கு குடியேறினோம். இந்த நிலையில் எனது அத்தை ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். அவருக்கு நானும், எனது தம்பி தீபக்கும்தான் நேரடி வாரிசுகள்.
அத்தை ஜெயலலிதா உயிரோடு இருந்த போது போயஸ் கார்டன், கொடநாடு, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் சொத்துக்களை வாங்கியுள்ளார். இந்த சொத்துக்கள் எல்லாம் எனக்கும், தம்பி தீபக்குக்கும்தான் சொந்தம்.
இந்த நிலையில் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து முதல்வர்,தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் கொடுத்தேன்.
எனது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. எனவே ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக அறிவித்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications