டிடிவி.தினகரனை நான் பார்த்ததே இல்லை.. அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: பதறிய மாதவன்
டிடிவி.தினகரனை நான் பார்த்ததே இல்லை, அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி: டிடிவி.தினகரனை நான் பார்த்ததே இல்லை, அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்துள்ளார். டிடிவி.தினகரனிடம் நான் பணம் வாங்கியதாக கூறுவது உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தீபாவிற்கும் அவரது கணவர் மாதவனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மாதவன் தீபாவின் பேரவையிலிருந்து விலகினார். மேலும் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார்.
தீபா குடும்பத்துக்குள் எழுந்த பிரச்சனையால் பல்வேறு இடங்களில் தீபா பேரவை கூண்டோடு கலைக்கப்பட்டது. நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் சேர்ந்தனர்.

பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு
இதைத்தொடர்ந்து தீபாவின் கணவர் மாதவன், டிடிவி.தினகரனிடம் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனாலேயே அவர் தீபாவுக்கு போட்டியாக தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும் கூறப்பட்டது.

கணவர் பெயரை குறிப்பிடவில்லை
இதனிடையே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுவில் தீபா தனது கணவரின் பெயரை குறிப்பிடவில்லை. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விளக்கம் அளித்த மாதவன்
இந்நிலையில் தனிக்கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிடிவி.தினகரன் திருச்சி மாவட்டம் முசிறியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டிடிவி.தினகரனிடம் நான் பணம் வாங்கிவிட்டதாக கூறுகின்றனர்.

டிடிவி.தினகரனை பார்த்ததே இல்லை
அதில் உண்மையில்லை. நான் இதுவரை டிடிவி.தினகரனை பார்த்ததே இல்லை. அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தீபாவின் கணவரான மாதவன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications