முழுப்படம் பார்க்கலை... சர்ச்சைக்குரிய காட்சிகளை மட்டுமே வாட்ஸ் ஆப்பில் பார்த்தேன்...எச்.ராஜா பல்டி

மெர்சல் படத்தை முழுவதுமாக இணையத்தில் நான் பார்க்கவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பல்டி அடித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெர்சல் படத்தை முழுவதுமாக நான் ஆன்லைனில் பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய காட்சிகளை மட்டுமே நான் பார்த்தேன் என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பல்டி அடித்துள்ளார்.

மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவம், டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை குறித்து எதிரான கருத்துகள் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜகவினர் அக்காட்சிகளை நீக்குமாறு படக்குழுவினருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

I have not seen the full movie through online, says H.Raja

இந்நிலையில் தனியார் செய்தி சானலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எச்.ராஜாவிடம் மெர்சல் படம் பார்த்துவிட்டீர்களா என்று நெறியாளர் கேட்டார். அதற்கு ராஜாவோ நெட்டில் பார்த்தேன் என்றார். இதற்கு நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் எச்,ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் பல்வேறு திரைத்துறையினரும் எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஷாலுக்கு எச்.ராஜா பதிலளித்துள்ளார். அதில் நான் கூறியதை சரியாக பார்த்துவிட்டு வந்து பேச வேண்டும்.

சமூகவலைதளங்களில் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய காட்சிகளை மட்டுமே நான் பார்த்தேன். இதில் என்ன தவறு உள்ளது. படம் முழுவதையும் பார்க்கவில்லை.

நான் பார்த்த காட்சியை மற்றவர்களுக்கு பகிர்ந்திருந்தால் கூட தவறு என்று கூறலாம் என்று எச்.ராஜா தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+