Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதாவை நான் பார்த்தேன்... சரத்குமார் தரும் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதா, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரை சந்திக்க மறுத்து விட்டதாக வெளியான செய்தியை சரத்குமார் மறுத்துள்ளார். தான் முதல்வரைச் சந்தித்ததாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கியுள்ளார்.

I met the CM, says Sarathkumar

நடிகை மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் ஜெயலலிதா அவரது வீட்டுக்கு வருகை தந்தார். அப்போது நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், முதல்வரைச் சந்திக்க முயன்றதாகவும், ஆனால் முதல்வர் மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இதற்கு தற்போது சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஒரு பத்திரிகையில் வந்த புகைப்படத்தை மேற்கோள் காட்டியுள்ள சரத்குமார், இந்தப் படம் நான் முதல்வரை அவரது காருக்கு அருகே சென்று பார்த்து விட்டுத் திரும்பியபோது எடுத்த படம். கார் அப்போது ரிவர்ஸில் வந்து கொண்டிருந்தது. என்னை அவமானப்படுத்தியதில் உண்மை இல்லை என்று சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கியுள்ளார்.

இன்னொரு டிவிட்டில்,

"தவறான செய்திகள் களங்கப்படுத்தும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதில்தான் எத்தனை மகிழ்ச்சி, வணக்கம்" என்று குறிப்பிட்டுள்ளார் சரத்குமார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+