ரஜினிகாந்துக்கு முதல்வராகும் ஆசை இருக்கிறது...நண்பர் ராஜ்பகதூர்
ரஜினிகாந்தின் அரசியல் பேச்சால் பிரமித்து போய்விட்டேன்; ரஜினிகாந்துக்கு முதல்வராகும் ஆசை உள்ளது என்று அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்தார்.
சென்னை: ரஜினி அரசியல்வாதியாகவே ஆகிவிட்டார். அவரது அரசியல் பேச்சை கேட்டு நான் பிரமித்து போய்விட்டேன் என்று அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்தார்.
நடிகர் ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம் குறித்து படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பேசி கொண்டிருக்கின்றனர். ஊரெல்லாம் இதே பேச்சுதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் ரஜினி அரசியலுக்கு வந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வரா? என்பதுதான் இப்போதைக்கு கேள்வியாக உள்ளது.
தமிழகத்தில் 44 ஆண்டுகளாக உள்ளதாக கூறிக் கொள்ளும் அவர் தமிழக மக்களுக்கு என்ன செய்தார். காவிரி விவகாரத்தில் குரல் கொடுத்தாரா, விவசாயிகள் பிரச்சினைகளுக்கு வாய்ஸ் கொடுத்தாரா, இல்லை மதுவிலக்கு பிரச்சினைகாவது வாய்ஸ் கொடுத்தாரா என்று ஆங்காங்கே அரசியல் கட்சிகள் ரஜினியை வறுத்து வாயில் போட்டு மென்று கொண்டிருக்கின்றனர்.

அரசியல் பேச்சு
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது நண்பர் ராஜ்பகதூர் சன் நியூஸ் தொலைகாட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில், ரஜினிதாந்த் அரசியல்வாதியாகிவிட்டார். அவரது அரசியல் பேச்சை கேட்டு பிரமித்து போய்விட்டேன்.

ஊழலுக்கு குட்பை
ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர் தன் பக்கத்தில் ஊழல்வாதிகளை வைத்துக் கொள்ளமாட்டார். இதை ரசிகர்களுடனான சந்திப்பு விழாவிலேயே கூறிவிட்டார். மேலும் லஞ்ச லாவண்யத்துக்கு இடமளிக்க மாட்டார். ரஜினியை அரசியலுக்கு வர மக்கள் அழைக்கின்றனர்.

நான் ஒதுங்கியே இருப்பேன்
ரஜினி அரசியல் கட்சி தொடங்கினாலும் இப்போது உள்ளதை போல் அதிலிருந்து ஒதுங்கியே இருப்பேன். எம்எல்ஏ-வாக போட்டியிட வேண்டும் என்ற ஆசை எல்லாம் எனக்கு இல்லை. அவர் முதல்வராகி அவருக்கு சோறு போட்ட,உப்பிட்ட மக்களை மறக்காமல் நல்லது செய்தாலே போதும்.

பெங்களூருக்கு வரமாட்டார்
தற்போது மனநிம்மதிக்காக இமயமலைக்கு அடிக்கடி சென்று வருகிறார். அரசியலுக்கு வந்துவிட்டால் பெங்களூருக்கும் வரமாட்டார், இமயமலைக்கும் செல்ல மாட்டார். ரஜினிக்கு முதல்வராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications