மன அழுத்தம் 100 சதவீதம்..10 சதவீதம் மட்டுமே வெளிப்படுத்தி உள்ளேன்.. செக் வைக்கும் ஓபிஎஸ்!
சென்னை: கடந்த 2 மாதத்தை வேதனையுடனே கழித்தேன். தொடர்ந்து மன அழுத்தம் இருந்து கொண்டே இருந்தது. அதில் 10 சதவீதத்தை மட்டும் தான் தற்போது கூறியிருக்கிறேன் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து விட்டு பின்னர் பேட்டி கொடுத்து தமிழகத்தையே புரட்டிப் போட்டு விட்டார் ஓ.பன்னீர் செல்வம். அதைத் தொடர்ந்து அவரிடமிருந்து பொருளாளர் பதவியைப் பறித்தார் சசிகலா.

இதன்பின்னர் தனியார் தொலைக்காட்சிக்கு ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில், பாஜகவுடன் எந்த வகையிலும் நான் தொடர்பில் இல்லை. ஜல்லிக்கட்டுக்காக மட்டும் தான் பிரதமரை சந்தித்து பேசினேன். தனிப்பட்ட முறையில் என் மீது குற்றம் சாட்ட முடியவில்லை.அதனால் பாஜகவுடன் என்னை இணைத்து குற்றம்சாட்டுகிறார்கள்.
எனது விசுவாசம் பற்றி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்கு தெரியும். சாதாரண தொண்டர்களை கூட உயர்த்தியவர் ஜெயலலிதா. சோதனை காலத்தில் என்னை முதல்வர் ஆக்கியவர் ஜெயலலிதா. அதிமுகவுக்கும், ஜெயலலிதாவுக்கும் விசுவாசியாகவே இருந்துள்ளேன். எனக்கு கிடைத்த நல்ல பெயரை அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் முதலமைச்சராக இருந்த போதும் சக அமைச்சர்களே என்னை அவமானப்படுத்தினார்கள்.
மன அழுத்தம் என்னிடம் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. அதனால் தான் பரிகாரம் தேடுவதற்காக ஜெயலலிதாவின் நினைவிடம் சென்றேன். அதன்பின்னர் பேட்டி கொடுக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆளாக்கப்பட்டேன். மன நெருக்கடி 100 சதவீதம் இருந்தது. அதில் 10 சதவீதம் தான் கூறியிருக்கிறேன் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications