பதவிக்காக எதையும் செய்யும் ஸ்டாலினை தலைவராக ஏற்கவே முடியாது: மு.க. அழகிரி
சென்னை: திமுகவில் பதவிக்காக எதையும் செய்யும் மு.க.ஸ்டாலினை கட்சியின் தலைவராக ஒருபோதும் ஏற்க முடியாது என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மு.க.ஸ்டாலினை நான் தலைவராக ஏற்க மாட்டேன் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். அவரை ஒரு போதும் தலைவராக ஏற்க மாட்டேன்.

ஏன் ஸ்டாலின் தலைமை?
என் மீதும், என் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்த பிறகு ஸ்டாலின் தலைமையை நாங்கள் ஏன் ஏற்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளால் நாங்கள் துவண்டு விடமாட்டோம்.

ஸ்டாலின் சொல்றதையே கேட்கிறாங்க
நான் சொல்வதை கேட்காத தலைவர், ஸ்டாலின் சொல்வதைத்தான் கேட்கிறார். தலைவரும், பொதுச் செயலாளரும் ஸ்டாலின் சொல்வதைத் தான் செய்கிறார்கள். எனக்கும் ஸ்டாலினுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை. கட்சி ரீதியாகத்தான் பிரச்சினை உள்ளது.

பதவிக்கு ஆசைப்படும் ஸ்டாலின்
ஸ்டாலின் பதவிக்கு ஆசைப்படுபவர். ஆனால் நான் அப்படி அல்ல. ஒரு போதும் பதவிக்காக கவலைப்பட்டதே இல்லை.

பொருளாளர் பதவியை மட்டும் பார்க்கனும்...
ஸ்டாலின் இப்போது தி.மு.க. தலைவர் மாதிரி செயல்பட ஆரம்பித்து விட்டார். அவருக்கு கட்சியில் பொருளாளர் பதவியை கொடுத்திருக்கிறார்கள். அவர் அதை மட்டும்தான் செய்ய வேண்டும். ஆனால் மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்கிறார்.

பதவிக்காக செய்கிறவர்
ஸ்டாலினை பொருத்தவரை அவர் பதவிக்காக எதையும் செய்வார். இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

கருணாநிதிதான் தலைவர்..
எனக்கு எப்போதுமே கருணாநிதிதான் தலைவர். அவர் இல்லாத தி.மு.க.வை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

கருணாநிதியுடன் சந்திப்பு இல்லை..
மீண்டும் தலைவரை உடனடியாக சந்திக்கும் திட்டம் இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. கட்சியில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஏன் மன்னிப்பு?
அப்படி இருக்கும் போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். அதுபோல விளக்கக் கடிதம் எதுவும் தலைமைக்கு அனுப்பமாட்டேன்.
இவ்வாறு மு.க. அழகிரி கூறினார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications