உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த உடனே நீதி கேட்டு பயணம் தொடங்குவேன்: ஓ.பன்னீர்செல்வம்
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நீதி கேட்டு மக்களை சந்திக்கும், எனது பயணம் தொடங்கும் என்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை: டிவி சேனல் பிரத்யேக பேட்டியில் அவர் கூறியதாவது: மே 14க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. எனவே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நீதி கேட்டு மக்களை சந்திக்கும், எனது பயணம் தொடங்கும்.
செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு அரசியல் சூழல் தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டுள்ளது. கட்சியிலும் ஆட்சியிலும், மக்களின் எண்ணங்களுக்கு மாற்றாக பல மாற்றங்கள் நடந்துள்ளது. மக்கள்தான் ஒரு நாட்டின் எஜமானர்கள். எனவே அவர்களை சந்தித்து நீதி கேட்கும் பயணத்தை தொடங்க உள்ளேன்.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றிருந்தாலும், அவர் எந்த குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார் என்பது, அவருக்கு வாக்களித்த எம்.எல்.ஏக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றாகவே தெரியும். ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கட்சி இருக்க கூடாது என்பதே எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கை. இந்த கொள்கை தற்போது சிதைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆட்சி மீதும், கட்சி மீதும் மக்கள் அதிருப்தியிலுள்ளனர். இது வரும் தேர்தல்களில் எதிரொலிக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications