ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டே விலகுவேன்.. கமல் திடீர் அறிவிப்பு !
சென்னை: மத்திய அரசின் 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பால் திரைப்படத்துறை பெரிதும் பாதிக்கப்படும் என்றும் வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஒரே மாதிரி வரி விதிப்பான ஜிஎஸ்டி ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. சினிமாவிற்கு 28 சதவீத வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும், என்ன தலைப்பாக இருந்தாலும், ஒரே மாதிரி 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் திரைப்படத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், சூதாட்டமும், சினிமாவும் ஒன்றல்ல வேறு வேறு. திரைப்படம் ஒரு கலை என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், திரைத்துறையை நம்பி ஏராளமானோர் உள்ளனர். சினிமாவை சரியாகவும், தவறாகவும் பயன்படுத்திய அரசியல் தலைவர்கள் உள்ளனர். ஜிஎஸ்டி வரியோடு நாங்கள் வருமான வரியும் கட்டவேண்டும். நாடு முழுவதும் வெளியாகும் இந்திப் படங்களுக்கு இந்த வரியை விதிக்கலாம். ஆனால் பிராந்திய மொழிப் படங்களுக்குப் பொருந்தாது. தேவையுமில்லை.
எனவே, சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் முடிவை கைவிடுவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். டிக்கெட் மீதான ஜி.எஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரியை குறைக்காவிட்டால் நான் சினிமாவை விட்டு விலகுவேன் என்றார் கமல்ஹாசன்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications