என் வாழ்க்கையில் இனி எந்த பதவிக்கும் போட்டியிட மாட்டேன் : வைகோ
சென்னை: இனி வாழ்நாளில் எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ஆயிரம் விளக்கு தொகுதி மதிமுக வேட்பாளர் சி.அம்பிகாபதியை ஆதரித்து, மாதிரி பள்ளி பகுதியில் வைகோ பிரசாரம் மேற்கொண்டார். மதுவிலக்கு விவகாரத்தில் பொய் பேசுவதில் திமுகவும், அதிமுகவும் கூட்டாளிகள் என்று சாடினார். திமுக ஆட்சியில் அதிமுகவினரின் ஆலைகளிலும், அதிமுக ஆட்சியில் திமுகவினரின் ஆலைகளிலும் மது வாங்கப்படுவதாக வைகோ கூறினார்.

கனிம மணல், ஆற்றுமணல் கொள்ளையை தடுத்தாலே, அரசுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்று பேசிய வைகோ, வாக்களார்களுக்கு பணம் கொடுக்கப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை எனக் குற்றம்சாட்டினார்.
பிரசார பேச்சை வைகோ நிறைவு செய்தபோது மதிமுக தொண்டர் ஒருவர், "நீங்கள் முதல்வர் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வேண்டியது தானே என்று கேட்டார்.
அதற்கு, வைகோ பதில் அளித்த வைகோ, அண்ணாவின் கொள்கைகளுக்காக, சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வதற்காக, மதுக் கடைகளை-ஊழலை ஒழிக்க, தமிழக மக்களைக் காக்க வாழ்கிறேன்.
எனக்கென சுயநலம் இல்லை. நாடு கெட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காக பேசுகிறேன். இனி என் வாழ்க்கையில் எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன் என்று கூறினார்.
சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதாக கூறிய வைகோ கடைசி நேரத்தில் போட்டியிடப் போவதில்லை என்று கூறி பின்வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications