ஸ்டாலினை சந்திக்க மாட்டேன்.. அழகிரி திட்டவட்டம்!
திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க போவதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க போவதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் மறைவுக்கு பிறகு ஸ்டாலின் - அழகிரி இடையே மோதல் அதிகரித்துள்ளது. ஸ்டாலின் தன்னை மீண்டும் கட்சியில் சேர்ப்பார் என எதிர்பார்த்தார் அழகிரி.
ஆனால் ஸ்டாலின் அதனை கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. இந்நிலையில் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று பேசி வந்தார் அழகிரி.

அரசியல் களத்தில் பரபரப்பு
இந்நிலையில் திமுகவில் தன்னை மீண்டும் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார் என பல்டி அடித்தார் அழகிரி. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றியது.

சென்னையில் பேரணி
இந்நிலையில் தனது பலத்தை நிரூபிக்க வரும் 5ஆம் தேதி கருணாநிதி நினைவஞ்சலி பேரணி நடத்த உள்ளார் அழகிரி. சென்னை அண்ணாசாலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை இந்த பேரணி நடைபெறுகிறது.

சென்னை வருகை
இதற்காக இன்று சென்னை வந்தார் முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான அழகிரி. அப்போது அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஸ்டாலினை சந்திக்க மாட்டேன்
திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

பலத்தை நிரூபிப்போம்
வருகிற 5ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பேரைத் திரட்டி அமைதிப் பேரணி நடத்துவோம். அப்பொழுது எங்களது பலத்தை நிரூபிப்போம் என்றும் அழகிரி கூறினார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications