யாருடன் கூட்டணி? டெல்லியில்தான் பதில் சொல்வேன்: விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை: லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை டெல்லி செய்தியாளர்களிடம் தான் சொல்வேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், சட்டசபையில் தாக்கலான பட்ஜெட் போற்றும் விதமாக இல்லை; தூற்றும் விதமாக தான் இருக்கிறது என்றார்.

மேலும் கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த விஜயகாந்த், கூட்டணி குறித்து டெல்லியில் அறிவிக்கப்படும் என்றார். பின்னர் தனது எம்.எல்.ஏக்களுடன் டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுகிறார் விஜயகாந்த்,.












Click it and Unblock the Notifications