என்னை முதல்வராக்குங்க நான் நிறைய பணிகளை செய்வேன்.. சொல்கிறார் தீபா
சென்னை: தன்னை தமிழக முதல்வராக ஆக்கினால் ஜெயலலிதாவை போல் ஆளுமை மிக்க தலைவராக செயல்பட்டு நிறைய பணிகளை செய்வேன் என ஜெ.தீபா கூறியுள்ளார்.
புதிய தலைமுறை டிவிக்கு ஜெ.தீபா சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது: தற்போதைய சூழலில் தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட வில்லை. மக்களும் ஆட்சியாளர்கள் மீது வெறுப்புடன் உள்ளனர். எனவே ஆட்சியை கலைத்து தேர்தலை நடத்துவது தான் சரியாக இருக்கும். ஒரு அரசியல் தலைவர் இறந்த பின்னர் அடுத்து அவர்கள் வாரிசு வருவது இயற்கை தான். நான் தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு.

ஜெயலலிதா இருக்கும் போது சசிகலாவை அரசியல் வாரிசு என குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும் போது அவர் எப்படி அரசியல் வாரிசாக முடியும். இரட்டை இலையை மீட்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. என் தொண்டர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நான் எதற்கும் பயப்பட மாட்டேன், பின்வாங்க மாட்டேன்
எனக்கு ஜெயலலிதாவின் உருவ ஒற்றுமை மட்டுமே உள்ளது. ஆளுமை திறமை இல்லை என சமூக வலைதளங்களில் வரும் கேலி, கிண்டல்கள் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. எனது பேரவை பணிகளை கூட செய்ய முடியாமல் சசிகலா தரப்பினர் தடுக்கின்றனர். தேர்தல் நடைபெறட்டும். என்னை முதல்வராக்கினால் ஜெயலலிதா போல் ஆளுமை மிக்கவராக செயல்பட்டு நிறைய பணிகளை செய்வேன். இவ்வாறு தீபா கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications