தூண்டிவிட்டதால் துடிக்கிறார் தீபக்.. அசரமாட்டேன் என்கிறார் தீபா
அரசியல் உள்நோக்கத்துடன் திடீர் பல்டி அடித்திருக்கும் சகோதரர் தீபக்குடன் இணைந்து செயல்படமாட்டேன் என்றும், சசிசலா குடும்பத்தினருடன் எனக்கு எந்த உடன்பாடும் கிடையாது என்றும் தீபா தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் இத்தனை காலம் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த தீபக் நேற்று திடீரென ஓ.பன்னீர செல்வத்துக்கும், சகோதரி தீபாவுக்கும் ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தீபா கூறியதாவது சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த தீபக்கின் திடீர் மனமாற்றத்துக்கு பின்னால் ஒரு சதியே இருக்கிறது. யாரோ தூண்டுதலின்பேரில் அவர் இதுபோல் செயல்படுகிறார். நான் ஆர்.கே. நகரில் போட்டியிடுவதைத் தடுக்கவே இதுபோன்று அரசியல் உள்நோக்கத்துடன் தீபக் நடந்து கொள்கிறார். மக்கள் விருப்பப்படி அரசியல் பயணத்தை இன்று தொடங்கிவுள்ளேன்.
எனது அத்தையின் போயஸ் தோட்ட இல்லமெல்லாம் எனக்கு வேண்டாம். அவர் பயன்படுத்திய பேனாவை மட்டும் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். சசிகலா, அவரது குடும்பத்தினருடன் எனக்கு எந்த உடன்பாடும் கிடையாது. எனக்கென்று ஒரு வட்சிய பாதையை வகுத்து கொண்டு கட்சி பணியாற்றுவேன். ஓபிஎஸ் தரப்புடனோ, சசி தரப்புடனோ, தீபக்குடனோ இணைந்து பணியாற்றப் போவதில்லை.
மக்களின் எதிர்ப்புகளை மீறி தமிழகத்தில் நடைபெறும் வரும் ஆட்சி விரைவில் கவிழும். தீயசக்திகளை மக்கள் விரட்டியடிப்பர். என்னை நம்பி எனக்கு ஆதரவளித்த கட்சியினருக்கும், பொது மக்களுக்கும் என் உயிருள்ள வரை கடமைப்பட்டுள்ளேன். சுயநலம் கருதாமலும், யாருக்கும் அஞ்சாமலும் மக்கள் பணியாற்றுவேன்.
என்னை நம்பி என் பின்னால் வந்துள்ளோரை கைவிட மாட்டேன். என் அத்தையைப் போன்ற தோற்றத்தில் உள்ள நான் விரைவில் அவரது இடத்தைப் பிடிப்பேன். போயல் தோட்ட இல்லத்தை நினைவிடமாக்க மக்கள் விரும்பினால் அவ்வாறு செய்யப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications