ஹெலிகாப்டரில் இருந்து உணவு பொட்டலம் வீசும் ராணுவம்.. மொட்டை மாடியில் நின்று கையேந்தும் மக்கள்
சென்னை: வெள்ளத்தில் சிக்கி, உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் சென்னைவாசிகளுக்கு இந்திய ராணுவம், ஹெலிகாப்டர்கள் மூலம், உணவு பொட்டலத்தை வழங்கி வருகிறது. உணவுக்காக ஏங்கி மக்கள் மொட்டை மாடிகளில் கையேந்தி நிற்பது பரிதாபத்தை வரவழைப்பதாக உள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய சென்னைவாசிகளுக்கு உதவி செய்ய, அவர்களை மீட்க, நேற்று ராணுவத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. கப்பலில், மீட்பு பணிக்கு தேவையான பொருட்களுடன், இன்று காலை கடற்படையினர் சென்னை துறைமுகத்திற்கு வந்தனர். விமானப்படை சார்பில் 5க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டது.
இதில், இன்று, 2 ஹெலிகாப்டர்கள் மூலம், நகரின் பல பகுதிகளில் ஆய்வு செய்து, எங்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்களோ, அங்கு உணவு பொட்டலங்களை வீசி வருகின்றனர்.
IAF chopper drops food packets for stranded locals in Chennai #ChennaiFloods pic.twitter.com/gPOMlijzEJ
— ANI (@ANI_news) December 3, 2015 தண்ணீர் சூழ்ந்து, வீடுகள் தனித்தனி தீவுகளாக மாறிவிட்டதால், உணவு கிடைக்காமல் அவதிப்படும், மக்கள், தங்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் குவிந்துள்ளனர். அங்கிருந்து ஹெலிகாப்டர்களை நோக்கி கையசைக்கிறார்கள். அவர்களை நோக்கி, உணவு பொட்டலங்களை ராணுவத்தினர் வீசுகின்றனர்.
அதை பிடிக்க மக்கள் போட்டா போட்டி போடுகின்றனர். உணவு தங்களுக்கு போதுமோ இல்லையோ என்ற அச்சத்தால், ஒவ்வொருவருமே, பொட்டலத்திற்கு போட்டி போடுகிறார்கள். சிலர், கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு மொட்டைமாடியில் நின்று உணவு கேட்டு கையசைக்கிறார்கள்.
அந்த பகுதிகளில் அதிக உணவு பொட்டலங்களை ராணுவத்தினர் வீசுகின்றனர். உணவு பொட்டலத்தோடு, குடிநீர் பாட்டில்களும் வைக்கப்பட்டுள்ளன. உணவு கேட்டு, மக்களை வானை பார்த்து கையசைக்கும் காட்சி, கைக்குழந்தைகளோடு தூரலுக்கு நடுவே, மொட்டை மாடியில் உணவுக்காக காத்திருக்கும் காட்சி பரிதாபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications