யாருக்கு வாக்களிக்க வேண்டும்.. சகாயம் தரும் டிப்ஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பணம், பரிசு பொருள் வாங்கிவிட்டு வாக்களிக்க வேண்டாம் என்று வாக்காளர்களை சகாயம் ஐ.ஏ.எஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய சகாயம், மேலும் கூறுகையில், நாம் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள், சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு பொது நல நோக்கோடு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் வைக்க வேண்டும்.

தேர்தலை நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு சகாயம் தெரிவித்தார்.
இதனிடையே, அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன், சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில், தோல்வி பயத்தால், அதிமுகவினர் மீது திமுகவினர் தாக்குதலை நடத்தி வருகிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications