ஐசியுவில் இதே நாளில் அன்று ஜெயலலிதா... இன்று நடராஜன் - ஆனா கவனிக்க சசி இல்லையே

கடந்த ஆண்டு உடல்நலக்குறைவினால் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த ஆண்டு அதே நாளில் கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழந்ததால் நடராஜன், சென்னையிலுள்ள குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா கடந்த ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது சசிகலா உடனிருந்து கவனித்து வந்தார். தனது கணவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது கவனிக்க வர முடியாத நிலையில் சசிகலா இருக்கிறார்.

சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ள அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனையறிந்து சிறையில் உள்ள சசிகலா கவலையடைந்துள்ளார்.

அப்பல்லோவில் ஜெயலலிதா

அப்பல்லோவில் ஜெயலலிதா

கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி நள்ளிரவில் உடல்நலக்குறைவினால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. காய்ச்சல், நீர் சத்து குறைபாடு என்று சொன்னது ஜெயலலிதா அறிக்கை. ஆனால் யாரையுமே பார்க்கவிடாமல் 75 நாட்கள் மருத்துவமனைக்குள் வைத்திருந்தனர்.

சடலமாக ஜெயலலிதா

சடலமாக ஜெயலலிதா

டிசம்பர் 6 ஆம் தேதியன்று காலையில் தமிழக மக்கள் அனைவரும் ஜெயலலிதாவின் உயிரற்ற உடலை மட்டுமே பார்த்தனர். மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டு விட்டார் ஜெயலலிதா.

சிறையில் சசிகலா

சிறையில் சசிகலா

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதிக்குப் பின்னர், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார் சசிகலா. அவரது கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

நடராஜனுக்கு சிசிக்சை

நடராஜனுக்கு சிசிக்சை

சென்னையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சில வாரங்களுக்கு முன்னர் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல், சிறுநீரகங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாக அப்போது கூறப்பட்டது.

8 மணி நேரம் டயலிசிஸ்

8 மணி நேரம் டயலிசிஸ்

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நடராஜனுக்கு நுரையீரல் அடைப்பும் இருப்பதாக கூறப்பட்டது. இந்த பிரச்சனைகள் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடராஜனுக்கு டயாலிசிஸ் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு நாளைக்கு 8 மணி நேரம் டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்த நடராஜன் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

நடராஜன் கவலைக்கிடம்

நடராஜன் கவலைக்கிடம்

நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. நடராஜன் உடல்நிலை குறித்து தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளதாகது.

வெண்டிலேட்டர் இல்லை

வெண்டிலேட்டர் இல்லை

கடந்த 9 மாதங்களாக கல்லீரல் மற்றும் கிட்னி பிரச்னைகளுக்காக நடராஜன் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் கல்லீரலில் ஏற்பட்டுள்ள மோசமான பிரச்சினையால், கல்லீரல் இன்டன்சிவ் கேர் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் பாதிப்பும் அவருக்கு உள்ளதால், நடராஜன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சசிகலா கவலை

சசிகலா கவலை

கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவர் காத்திக்கிறார். நடராஜன் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் நடராஜனின் உடல்நிலை குறித்து அறிந்துள்ளனர். கணவரின் உடல்நிலை பற்றி தகவல் அறிந்த நாள் முதலே சசிகலா கவலையடைந்துள்ளார்.

கவனிக்க முடியலையே

கவனிக்க முடியலையே

கடந்த ஆண்டு இதே நாளில் கிரிட்டிக்கல் கேர் யூனிட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை உடனிருந்து கவனித்துக்கொண்டார் சசிகலா. இப்போதோ தனது கணவர் உடல்நலக்குறைவினால் கவலைக்கிடமாக உள்ள நிலையிலும் அவரை கவனிக்க முடியாத நிலையில் இருக்கிறார் சசிகலா. இதை பார்க்கும் போது அதிமுக தொண்டர்களுக்கு இயற்கை எதையோ உணர்த்துவது போல உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+