பா.ஜ.க அணியில் தே.மு.தி.க. இணைந்தால் மகிழ்ச்சி: பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அணியில் தேமுதிக இணைந்தால் மகிழ்ச்சி அடைவோம் என்று மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஏராளமானோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநில தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் முன்னிலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் 300 பேர் ஹரிகரன், அனிதா, மகேஸ்வரி, கவுரி ஆகியோர் தலைமையில் இணைந்தனர்.

நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெயபால் தலைமையில் 200 பேரும், கோவையை சேர்ந்த மாரிமுத்து தலைமையில் 100 பேரும் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
பாரதீய ஜனதா கட்சி தமிழ் மக்கள் உணர்வுகளில் கலந்து வருகிறது. எனவே தான் ஏராளமானோர் கட்சியில் இணைகிறார்கள். பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம்.
கடந்த 1-ந் தேதி முதல் ‘வீடு தோறும் மோடி' 'உள்ளம் தோறும் தாமரை' என்ற பிரசார யாத்திரையை கிராமங்களில் நடத்தி வருகிறோம். கடந்த 22-ந் தேதியுடன் முடிவதாக இருந்த இந்த யாத்திரை வருகிற ஜனவரி 12-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 3-ந் தேதி கட்சியின் நகர, ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் திருச்சியில் நடைபெறுகிறது. ஜனவரி 31-ந் தேதி மீனவர்கள் பிரச்சினையை மையப்படுத்தி கடல் தாமரை போராட்டம் நடைபெறும்.
அதில், சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பை வலியுறுத்தி ‘தாலி காக்கும் போராட்டம்' நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு.
கே: பாஜக கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறுகிறதா?
ப: பாஜக கூட்டணியில் தே.மு.தி.க. சேர்ந்தால் மகிழ்ச்சி அடைவோம்.
கே: நரேந்திரமோடி மீண்டும் எப்போது தமிழகம் வருகிறார்?
ப: பிப்ரவரி மாதம் வர வாய்ப்பு உள்ளது.
கே: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் பதவி ஏற்றுள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?
ப: அவருக்கு எங்கள் பாராட்டுக்கள். தொடர்ந்து பாராட்டு பெறும் வகையில் அவர் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications