For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூட்டணி அமைக்க திமுக வந்தால், பாஜக பரிசீலிக்கும்: நிர்மலா சீதாராமன்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த காலத்தில் அந்த கட்சிக்கு நல்ல மரியாதை அளித்ததாக பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி அமைக்க திமுக தங்களை அணுகினால் பாஜக பரிசீலிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

nirmala seetharaman

பாஜக கூட்டணியில் இருந்தபோது திமுகவுக்கு நல்ல மரியாதை அளித்தோம். லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் தீவிரம் காட்டவில்லை. காங்கிரஸ் தான் தனது கூட்டணி கட்சிகளை சமாதானம் செய்து மசோதாவை நிறைவேற்ற வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது தொடர்பாக திமுக பாஜகவை அணுகினால் இது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர், வாஜ்பாய் போன்ற திறமையான பாஜக தலைவர் தற்போது யாரும் இல்லை என்று பதில் அளித்தார்.

English summary
BJP spokesperson Niramala Seetharaman told that if DMK formally approaches BJP about alliance, the party will take a call.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X