ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்
டெல்லி: தமிழ்நாட்டில் பாஜகவின் முகமாக இருந்த அண்ணாமலை, நேற்றைய தினம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஒரு காலத்தில் தமிழகத்தில் பாஜகவை வளர்த்த அண்ணாமலை, இன்று அக்கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுக்க என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்து அடுத்தடுத்த திருப்பங்களைச் சந்தித்து வரும் இந்தச் சூழலில், டெல்லி சென்றுள்ள தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான கே.அண்ணாமலை, பாஜாகவில் இருந்து விலகக் கடிதம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்றைய தினம் அவர் டெல்லியில் உள்ள கட்சியின் தேசிய மேலிடத் தலைவர்களுடன் தீவிரமாக ஆலோசித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது..

அண்ணாமலை
கடந்த 2023 மற்றும் 2024ல் தமிழக அரசியல் களத்தையே அதிர வைத்த அண்ணாமலையின் பாஜக பயணம், இவ்வளவு சீக்கிரம் பாஜகவில் ஒரு முற்றுப்புள்ளியை நோக்கி நகரும் என்பதை யாராலும் கணித்திருக்க முடியாது. கடந்த 2023 ஜூலை 28ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் தொடங்கி வைக்கப்பட்ட அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' நடைப்பயணம், தமிழக பாஜக வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். தமிழகத்தின் 234 தொகுதியும் வலம் வந்த இந்த 200 நாள் யாத்திரை, 2024 பிப்ரவரி 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைந்தது.
இந்த யாத்திரையில் ஒவ்வொரு கூட்டத்திலும், திமுக ஆட்சி மீதான விமர்சனங்களை அவர் கூர்மைப்படுத்தினார். போகும் எல்லா இடங்களிலும் திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார்.. இதற்கு மக்களிடையே நல்ல ஒரு ரெஸ்பான்ஸும் கிடைத்தது. இதன் பலனாக, 2019 மக்களவைத் தேர்தலில் வெறும் 3.66 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு வங்கி, 2024 லோக்சபா தேர்தலில் 11 சதவீதமாக உயர்ந்தது.
பின்னணி
2020ல் தனது கர்நாடகச் சிங்கம் ஐபிஎஸ் காக்கிச் சட்டையைக் கழற்றிவிட்டு, பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்குள் நுழைந்தார் அண்ணாமலை. வந்த சில வாரங்களிலேயே மாநிலத் துணைத் தலைவர், அடுத்த ஓராண்டிற்குள் மாநிலத் தலைவர் என பாஜக முகாமின் உச்சத்தைத் தொட்டார்.
தற்போது பாஜகவில் இருந்து விலகத் துடிக்கும் 41 வயதான அண்ணாமலை, அடுத்த கட்டமாகத் தனது சொந்த அரசியல் பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் ஏற்கனவே நடத்தி வரும் வி தி லீடர்ஸ்' (We The Leaders) என்ற தன்னார்வ அமைப்பையே பயன்படுத்தவுள்ளார். அதை விரைவில் ஒரு புதிய அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான வேலைகளில் அவர் இறங்கியுள்ளதாக அக்மார்க் தகவல்கள் கூறுகின்றன.
பிடிவாதம்
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணியும் வைக்காமல், பாஜக தனித்து நின்று காலூன்ற வேண்டும் என்பதில் அண்ணாமலை ஆரம்பம் முதலே பிடிவாதமாக இருந்தார்.. ஜெயலலிதா உள்ளிட்ட திராவிட அடையாளங்களுக்கு எதிராக அண்ணாமலை முன்வைத்த விமர்சனங்கள், அதிமுக தலைமையைக் கடுமையாக முகம் சுளிக்க வைத்தது. இதன் காரணமாகவே இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி அடியோடு முறிந்தது.
ஆனால், சமீபத்தில் நடந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக டெல்லி மேலிடம் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியை அமைத்தது. அப்போது, "அண்ணாமலை தலைவராக இருந்தால் கூட்டணி இல்லை" என்று அதிமுக போட்ட நிபந்தனையின் காரணமாகவே, அண்ணாமலை அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். ஆனால், நடந்த முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மிக பெரிய ஒரு தோல்வியைச் சந்தித்தது.
அடுத்தகட்ட முடிவு
தற்போதைய சூழலில் பாஜகவில் தனக்கு எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்தே அண்ணாமலை இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதனால் தான், தலைமையுடன் பேசி சுமுகமாக விடைபெற அவர் விரும்புகிறாராம். அவரை சமாதானப்படுத்த ராஜ்யசபா சீட் கொடுக்கக் கூட பாஜக தலைமை ரெடியானது. இருப்பினும், டெல்லி மேலிடத்தின் இந்த முடிவை ஏற்காமல், தனது ஸ்டைல் அதிரடி அரசியலைத் தொடர அண்ணாமலை முடிவெடுத்துள்ளார்.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications