மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தினால் வரும் தேர்தலில் தி.மு.க.வின் தோல்வி உறுதி... மு.க.அழகிரி பாய்ச்சல்
சென்னை : மு.க.ஸ்டாலினை வருகின்ற தேர்தலில் முன்நிறுத்தினால் தி.மு.க. வெற்றி பெறாது என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது...

கலைஞருக்காக மட்டுமே மக்கள் தி.மு.க.விற்கு மக்கள் வாக்களிப்பார்கள். கலைஞரை விட ஸ்டாலினுக்கு ஆதரவு அதிகம் என்பது பொய்யான தகவல். ஏற்கனவே நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலினை முன்னிறுத்தியதால் தி.மு.க. ஒரு இடம் கூட பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்தது.
கருத்து கணிப்பு முடிவு ஸ்டாலின் உறவினர்களால் திரித்து கூறப்பட்டுள்ளன.
கலைஞரை விட ஸ்டாலினுக்கு ஆதரவு அதிகம் என்பதை தி.மு.க . வில் இருக்கும் முக்கிய தலைவர்கள் ஒப்புக்கொள்வார்களா?. சட்டப்பேரவை தேர்தலின் போது தான் தி.மு.க.வின் நிலைக்குறித்து தெரியவரும்
நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்த தற்கு 2 ஜி விவகாரம் தான் காரணம் அப்படியிருக்க சட்டமன்ற தேர்தலிலும் 2 ஜி விவகாரம் எதிரொலிக்கும். மீண்டும் அழைத்தால் தி.மு.க.விற்கு செல்வேன் ஆனால் அழைக்கமாட்டார்கள்.
எனது பல ஆண்டுகால உழைப்பை திமுக பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.இவ்வாறு மு.க.அழகிரி தெரிவித்தார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்த மு.க. அழகிரியிடம் செய்தியாளர்கள் கருத்துக்கணிப்பு குறித்து கேட்டபோது, தி.மு.க. என்றால் அது கருணாநிதிதான். அவரை தவிர வேறு யாரும் இல்லை. கருத்து கணிப்புகள் மூலம் சிலர் கனவு காண்கிறார்கள் என்று ஸ்டாலினை குறிப்பிடாமல் கூறிவிட்டு சென்றார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications