Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

18 எம்எல்ஏக்கள் வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு.. அடுத்து இதுதான் நடக்கும்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு...வீடியோ

    சென்னை: எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். எனவே அடுத்து வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சபாநாயகர் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று மதியம் 1 மணிக்கு ஹைகோர்ட் தீர்ப்பளித்தது..

    தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகிய நீதிபதிகள் அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது.

    தலைமை நீதிபதி முதலில்

    தலைமை நீதிபதி முதலில்

    முதலில் இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பை வாசித்தார். அப்போது, சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பை வாசித்தார். அவர், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்தார்.

    பல வழக்குகள்

    பல வழக்குகள்

    இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிவிட்டனர். இதுபோல இதற்கு முன்பு நாட்டின் பல வழக்குகளில் நடந்துள்ளது. அப்போது 3வது நீதிபதியிடம் வழக்கு விசாரணை அனுப்பப்படும். இந்த வழக்கிலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. 3வது நீதிபதி விசாரணை நடத்துவார் என்று, ஹைகோர்ட் அறிவித்துள்ளது. 3வது நீதிபதி யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    தீர்ப்பை மட்டும் ஆராய்வார்

    தீர்ப்பை மட்டும் ஆராய்வார்

    3வது நீதிபதி அமர்வுக்கு வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளாது என தெரிகிறது. இன்றைய தீர்ப்பை 3வது நீதிபதி ஆராய்ந்து தீர்ப்பை வழங்குவதுதான் மரபு. எனவே 3வது நீதிபதி நியமனம் செய்த பிறகு, அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகலாம் என தெரிகிறது. அதுவரை 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடரும். அதே நேரம் அந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த முடியாது.

    எடப்பாடி அரசுக்கு நிம்மதி

    எடப்பாடி அரசுக்கு நிம்மதி

    3வது நீதிபதி விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகும்வரை எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
    இதனால் எடப்பாடி அரசுக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+