அய்யர் தனது தடித்த நாக்கை அடக்காவிட்டால் பாஜகவினர் தாக்குவார்கள்: ஹெச். ராஜா

நாகை மாவட்டம் திருக்கடையூரில் பாஜக மாநில துணைத் தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசிடம் நாட்டை முன்னேற்றத் தேவையான திட்டங்கள் எதுவும் இல்லை. வாஜ்பாய் ஆட்சியில் தங்க நாற்கரச்சாலை கொண்டு வரப்பட்டது. அந்த பாதையில் இந்தியாவின் 4 முக்கிய நகரங்களை இணைத்து புல்லட் ரயிலை இயக்க, 100 புதிய நகரங்களை நிர்மாணிக்க மோடி திட்டமிட்டுள்ளார். மோடிக்கு பொருளாதாரம் தெரியவில்லை என்று கூறுவது தவறு.
அவர் ஆட்சி செய்யும் குஜராத்துடன் வேறு எந்த மாநிலத்தையும் ஒப்பிடக் கூடாது. குஜராத்தை சீனாவுடன் தான் ஒப்பிட வேண்டும் என்று உலக நாடுகளே ஒப்புக் கொண்டுள்ளன.
மணிசங்கர் அய்யர் தனது தடித்த நாக்கை அடக்காவிட்டால் பாஜக தொண்டர்களின் நேரடி தாக்குதலுக்கு அவர் ஆளாகுவார். மோடியை டீ விற்கச் சொல்லும் அய்யர் சோனியா காந்தியை அவர் முன்பு லண்டனில் செய்த வேலையை செய்யுமாறு கூறுவாரா?. திறமையான பிரதமர் இருந்திருந்தால் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்யாது.
கெஜ்ரிவால் நடத்தும் போராட்டங்கள் கோமாளித்தனமாக உள்ளது. மக்கள் அவரை நம்பி ஏமாந்து போய்விட்டனர் என்றார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications