பாஜகவின் பி டீம் நாம் தமிழர் என்றால்.. திமுக தான் ஏ டீம்.. ஈரோட்டில் சீமான் ஆவேசம்!
ஈரோடு: பாஜகவின் பி டீம் நாம் தமிழர் கட்சி என்றால், பாஜகவின் ஏ டீம் திமுக தான் என்று சீமான் ஆவேசமாக விமர்சித்துள்ளார். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் புதிய அரசியல் படைப்போம் என்று கூறிய சீமான், என்னை சிறையில் அடைப்பதை தவிர உங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்.5ஆம் தேதி நடக்கவுள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் இன்றைய பரப்புரையில், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் எப்படியாவது மக்களை ஏமாற்ற வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள். தேர்தல் ஒன்றை மட்டுமே கவனத்தை வைத்து, எப்படியெல்லாம் வாக்குறுதிகளை கொடுத்து வாக்கினை வெல்ல முடியும் என்றே செயல்படுவார்கள். வாக்கினை பெறுவது வேறு, வாக்கினை வெல்வது வேறு.
வாக்கினை வெல்வது என்பது பணத்தை கொடுத்து வாங்குவது தான். தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்கள் எப்போதும் அடுத்த தேர்தலை மட்டுமே சிந்திக்கிறார்கள். 60 ஆண்டுகால திராவிடர்களின் ஆட்சியின் லட்சியம் என்னவென்றால், ஆயிரம் ரூபாய்க்கு என் அம்மாவும், தங்கையும் கையேந்துவது தானா.. இதுதான் நவீன தமிழ்நாட்டில் வருகிறது என்கிறார்கள்.
ரூ.1,000க்கு கையேந்தினால் புரட்சி அல்ல.. அது வறட்சி.. இப்படியொரு அரசியலை துரத்திவிட்டு, மக்களுக்கான அரசியலை கையிலெடுத்துள்ளது நாம் தமிழர் கட்சி. நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று ஏமாற்றி கொண்டே இருக்கிறார்கள். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் தான். அப்போது கூட்டணியில் இருந்த கட்சி திமுக. ஜிஎஸ்டி வரிக்கு ஆதரவு கொடுத்ததும் இதே ஆட்சியாளர்கள் தான்.
பெரியாரை வேண்டுமென்றே விமர்சிக்கிறான் சீமான் என்கிறார்கள். நான் வேண்டுமென்று விமர்சிக்கவில்லை. வேண்டாம் என்று தான் பெரியாரை விமர்சிக்கிறேன். இந்திய சுதந்திரத்திற்காக போராடாதவர்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தான். அந்த வரிசையில் தமிழ்நாட்டின் பெரியார் இருக்கிறார். சரியாக இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தான். 2026ல் புதிய அரசியல் படைப்போம்.
என்னை பாஜகவின் பி டீம் என்று சொல்கிறார்கள். பாஜகவின் பி டீம் நாம் தமிழர் கட்சி என்றால், ஏ டீம் திமுக தான். அதனை ஒழிக்க வேண்டும். என்னை சிறையில் அடைக்கலாம். வேறு என்றும் செய்ய முடியாது. பல்வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களை திமுகவில் சேர்க்கிறார்கள். எந்த கட்சி என்று கூட பெயர் சொல்ல முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications