பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டினால் நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம்:அமைச்சர் அதிரடி
பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டினால் நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டினால் நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

பச்சைக்கொடி காட்டுவோம்
இந்நிலையில் விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டினால் அதிமுகவினர் பச்சைக்கொடி காட்டுவோம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் காவிரி நீரை பெற பிரதமருக்கு உரிய அழுத்தம் கொடுப்போம் என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

திசை திருப்பும் நாடகம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடத்தும் மு.க.ஸ்டாலினின் நடைபயணம் மக்களை திசை திருப்பும் நாடகம் என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

மத்திய அரசை பகைத்துக்கொள்வது
நமக்கு தேவை காவிரி மேலாண்மை வாரியம் தான் என்று கூறிய அவர், பிரதமர் உசுப்பேத்துவதும், மத்திய அரசை பகைத்துக்கொள்வதும் நமக்கு தேவையில்லை என்றார்.

காவிரியில் தண்ணீர்
பிரதமரை பகைத்துக்கொண்டு பிரதமரிடம் சண்டை போட்டுவிட்டு யாரிடம் கோரிக்கை அளிப்பது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். காவிரியில் தண்ணீர் பெற வேண்டும் என்பது தான் நமது நோக்கமே தவிர பிரதமரிடம் சண்டைபோடுவதில்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications