நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது.. கொந்தளித்த தமிழிசை!
நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது என தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசமாக பேசியுள்ளார்.
Recommended Video

கோவை: நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது என தமிழிசை சவுந்தரராஜன் படு ஆவேசமாக பேசியுள்ளார்.
கோவை மாவட்ட பாஜக தலைவர் வீட்டில் மர்ம நபர்கள் நேற்று பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவரது வீடு சேதமடைந்ததோடு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சேதமடைந்தது.
இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழிசை கண்டனம்
அப்போது, கடந்த 7ஆம் தேதிதான் கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. நேற்றிரவு மீண்டும் பாஜக மாவட்ட தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இது ஒரு ஆபத்தான நிகழ்வு. கடும் கண்டனத்திற்குரியது.

சும்மாவிடக்கூடாது
தொடரும் இதுபோன்ற சம்பவங்கள் போலீசார் அஜாக்கிரதையாக உள்ளனர் என்பதை காட்டுகிறது. இது பாஜகவின் மீது நடத்தப்படும் கடைசி தாக்குதல். இதுபோன்ற சம்பவங்களை சும்மாவிடக்கூடாது.

தமிழகம் தாங்காது
இனிமேல் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது. ரத யாத்திரை பிரச்சனையில்லை, ரதயாத்திரை வரக்கூடாது என்றுதான் பிரச்சனை செய்கின்றனர்.

ரதம் வரக்கூடாது
இந்துக்கள் அத்தனை பேரும் சிந்தனை செய்யும் காலம் வந்துவிட்டது. ராமரையும் சீதாவையும் அனுமரையும் தாங்கிக்கொண்டு செல்லும் ரதம் கூட தமிழகத்திற்குள் வரக்கூடாது என்றால் இந்துக்களின் ஓட்டு அவர்களுக்கு கிடைக்கக்கூடாது.

வருங்காலத்தில் பார்ப்போம்
இது அண்ணா வளர்த்த தமிழ் இல்லை. ஆண்டாள் வளர்த்த தமிழ். பெரியார் பிறந்தது பெரிதா? இல்லை நாயன்மார்கள் ஆழ்வார்கள் பிறந்தது பெரிதா என்று வரும் காலத்தில் பார்ப்போம்.

இனி அச்சப்பட வேண்டும்
திராவிட நாடு என்றால் என்ன? தமிழ்நாடு என்றால் என்ன என்பதில் ஸ்டாலினுக்கே சந்தேகம் என்றும் தமிழிசை சாடினர். இந்து மதத்தை பற்றி பேசுபவர்கள் இனி அச்சப்பட வேண்டும். இந்துக்கள் மீது கைவைக்க துணிச்சல் வரக்கூடாது என்றும் என்றும் படு ஆவேசமாக பேசினார்.












Click it and Unblock the Notifications