ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் சென்னை ஐஐடி நிர்வாகம்... மாணவர்கள் குற்றச்சாட்டு
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆதரவாக சென்னை ஐஐடி நிர்வாகம் செயல்பட்டு வருவதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
சென்னை: சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டது குறித்து மாணவர்கள் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாக ஐஐடி நிர்வாகம் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினர்.
இறைச்சிக்காக மாடுகள், எருமை, ஒட்டகம், கன்றுக்குட்டி ஆகியவற்றை கொல்லக் கூடாது என்று மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை அன்று சட்டம் கொண்டு வந்தது. இதற்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சட்டத்தை திரும்ப பெறுமாறு தமிழக எதிர்க்கட்சிகள், புதுவை, கேரள ஆளும் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகத்தில் போராட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை ஐஐடி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா நடத்தினர். இதில், சுமார் 80-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் மாட்டிறைச்சி உணவு வகைகளை ஹோட்டலில் வாங்கிவந்து வளாகத்தின் உள்ளேயே இணைந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாட்டிறைச்சித் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த ஆய்வு மாணவரான சூரஜ் மீது பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த மாணவர்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் சூரஜின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான மாணவர் சூரஜ் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
இதனிடையே தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஐஐடி மாணவர்கள் இன்று செய்தியாளர்கள் மன்றத்தில் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், பீப் திருவிழாவை அமைதியான முறையில் நடத்தி வந்தோம்.
இந்த திருவிழா குறித்து எங்கள் கல்வி நிறுவனத்தின் டீனுக்கு நன்றாகவே தெரியும். 2 மாணவர்கள் சூரஜை பிடித்துக் கொள்ள மணீஷ் என்ற மாணவர் சூரஜின் கண்ணில் குத்தினர். சூரஜ் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் மணீஷ் தாக்குதலுக்கு உள்ளானதாக பொய் பரப்புரை செய்து வருகின்றனர்
மணீஷ் என்ற மாணவரின் செயல்பாடுகள் குறித்து ஐஐடி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை ஏதும் இல்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்காதது நிர்வாகத்தின் தவறாகும். ஐஐடி நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது என்று அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications