ஐ.ஐ.டி. நிர்வாகத்தைக் கண்டித்து சாஸ்திரி பவன் முற்றுகை – காங்கிரஸ் கட்சியினர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சாஸ்திரி பவன் எதிரே காங்கிரஸ் கமிட்டியின் ஆதிதிராவிடர் பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

IIT madras ban row: Congress workers protest in Shastri bhavan

சென்னை ஐஐடி.யில் இயங்கி வந்த அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்ட அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

IIT madras ban row: Congress workers protest in Shastri bhavan

ஐ.ஐ.டி. எதிரே போராட்டம் நடத்திய மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் பலர் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி போராட்டங்களில் ஈடுபட்டு வருவோரை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

IIT madras ban row: Congress workers protest in Shastri bhavan

இந்நிலையில், மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சாஸ்திரி பவன் எதிரே காங்கிரஸ் கமிட்டியின் ஆதிதிராவிடர் பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செல்வப்பெருந்தகை தலைமையில் தடையை மீறி ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் சாஸ்திரி பவனை முற்றுகையிடவும் முயன்றனர்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+