துண்டு துண்டாக வெட்டி எறிவேன் என எச்சரித்த மனீஷ்.. கொந்தளிக்கும் சென்னை ஐஐடி மாணவர்கள்!
மாட்டிறைச்சி உணவுத் திருவிழாவை நடத்தியதற்காக சூரஜை மாணவர் மனீஷ் கடுமையாக தாக்கியதாக ஐஐடி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : 2 மாணவர்கள் சூரஜை பிடித்துக் கொள்ள சூரஜை மணீஷ் கண்ணில் தாக்கியதாக சக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த 28ம் தேதி இரவு சென்னை கிண்டியிலுள்ள ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி திருவிழா நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழாவை நடத்தியதற்காக சூரஜ் என்ற மாணவர் கடுமையாக தாக்கப்பட்டார், இது குறித்து சக மாணவர்கள் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்ற்ததில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது பேசிய சுவாமிநாதன் என்ற மாணவர், அர்ஜூன் என்ற மாணவரை சந்தித்து உன்னைக் கொன்று தூக்கில் தொங்க விடுவேன் என்று மனீஷ் எச்சரித்தார். இதே போன்று நிஷான் என்ற மாணவரையும் துண்டுதுண்டாக வெட்டிப் போட்டுவிடுவேன் இது தான் சரியான பதிலடியாக இருக்கும் என்றும் மனீஷ் மிரட்டியதாக தெரிவித்தார்.

நடவடிக்கையில்லை
மனீஷின் இந்த மிரட்டல் குறித்து டீனிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு நடவடிக்கை எடுத்திருந்தாலே சூரஜ் மீதான கொலைவெறித் தாக்குதலை தடுத்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

ஆதாரம் உள்ளது
மற்றொரு மாணவர் சூரஜ் தாக்கப்பட்டது குறித்து கூறும் போது, சூரஜை இரண்டு மாணவர்கள் கைகளை பிடித்துக் கொள்ள மனீஷ் பலமாக கண்ணில் அடித்துத் தாக்கினார். இதற்கான ஆதாரங்கள் ஐஐடி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன என்றார். இதுமட்டுமின்றி சூரஜை மனீஷ் மருத்துவமனையிலும் சென்று மிரட்டியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதற்காக வீடியோ ஆதாரங்களும் மருத்துவமனை சிசிடிவி காட்சியில் உள்ளது என்றார்.

நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை
தாக்கப்பட்ட மாணவர் சூரஜை இது வரை கல்லூரி நிர்வாகத்தினர் கண்டு கொள்ளவில்லை என்று மற்றொரு ஐஐடி மாணவர் தெரிவித்தார். மாணவர்கள் பணத்தை கொண்டு தற்போது சூரஜிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சூரஜ்க்கான முழு மருத்துவ செலவையும் ஐஐடி நிர்வாகமே ஏற்க வேண்டும் என்றார்.

போராட்டம் தொடரும்
சூரஜை தாக்கிய மாணவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை மாணவர்களின் போராட்டம் தொடரும் என்றனர். மேலும் சூரஜை தாக்கிய மாணவன் மனீஷ் கைகள் உடைந்ததாக சொல்வது பொய் நாடகம் என்றும் மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications