இலங்கை படுகொலையில், மன்மோகன், ப.சிதம்பரத்துக்கும் பொறுப்புண்டு.. இல.கணேசன்

Subscribe to Oneindia Tamil

Ila Ganesan slams PC
சென்னை: இலங்கை இனப்படுகொலையில், பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கும் தார்மீகப் பொறுப்பு உண்டு என்று தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பாஜக மீது ப.சிதம்பரம் திடீரென்று குற்றம் சுமத்தி உள்ளார். இது காலம் கடந்து ஏற்பட்ட ஞானோதயம்.

அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கினால் அது எப்படி இந்தியாவுக்கு எதிராக திரும்புமோ அதேபோல் இலங்கை அரசுக்கு கொடுக்கும் ஆயுதங்கள் தமிழர்கள் மீது பாயும் என்பதை பா.ஜ.க. உணர்ந்து இருந்தது.

எனவேதான் இலங்கை அரசு ஆயுதம் கேட்டபோது தர மறுத்ததோடு இலங்கை வீரர்களின் ஆயுத பயிற்சிக்கும் தார்மீக ஆதரவு தர மறுத்தவர் வாஜ்பாய் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு வெறும் நாடகம். இதனால் பயன்பெற போவது ராஜபக்சே. இன்னல்களுக்கு ஆளாகப்போவது தமிழர்கள் என்பதால் காமன்வெல்த் மாநாட்டை எதிர்த்தது பா.ஜனதா.

இங்கிலாந்து பிரதமர் கேமரூனின் அடிப்படை தைரியம் கூட மன்மோகன் சிங்குக்கு வராதது வருத்தம் அளிக்கிறது. இனியும் இந்த பிரச்சினையில் காங்கிரஸ் போடும் நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ராஜபக்சே 100 சதவீத பொறுப்பு என்றால் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 50 சதவீத தார்மீக பொறுப்பு உண்டு.

மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ப.சிதம்பரத்துக்கும் தார்மீக பொறுப்பு உண்டு என்பதை அவர் உணரவேண்டும். காலம் கடந்து உண்மைகளை மறைக்க குற்றம் சுமத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+