அதிமுகவை பிளவுபடுத்துகிறார்.. தினகரனுக்கு இல.கணேசன் கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி: டிடிவி தினகரனின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது என்று பாஜக ராஜ்யசபா எம்.பி. இல.கணேசன் தெரிவித்தார்.

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன் இன்று கோவில்பட்டியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

Ila.Ganeshan slams TTV Dinakaran

இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு பாஜக சார்பில் வரவேற்பு தெரிவிக்கிறேன். இரு பிரிவுகளும் இணைந்தது வரவேற்கத்தக்கது.

அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லாதவர் அதிமுகவில் உரிமை கோருவது தவறு. அதிமுகவை பிளவு படுத்த நினைக்கும் தினகரனின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாஜக மேலிடம் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆதரவு போக்கை கடைபிடிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யும் நிலையில், இல.கணேசன், தினகரனை கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ila.Ganeshan says Dinakaran's claim over AIADMK is condemnable.
Please Wait while comments are loading...