'அனுதாபத்துக்காக'வே இளவரசி உடல்நிலை குறித்து கிளப்பிவிடப்படும் வதந்திகள்?
அனுதாபத்துக்காவே இளவரசி உடல்நிலை குறித்து விவேக் கோஷ்டி வதந்தி பரப்புவதாக திவாகரன் தரப்பு குமுறுகிறது.
சென்னை: தங்கள் மீது அனுதாபம் வர வேண்டும் என்பதற்காகவே இளவரசிக்கு உடல்நலக் குறைவு என வதந்திகள் கிளப்பிவிடப்படுவதாக திவாகரன் தரப்பு குமுறிக் கொண்டிருக்கிறதாம்.
சசிகலா குடும்பத்தில் திவாகரன் மற்றும் இளவரசி தரப்புகளுக்கு இடையே உச்சகட்ட மோதல் நடைபெற்று வருகிறது. இளவரசி மகன் விவேக்தான் சசிகலாவை சிறையில் சந்திக்கிறார்.
திவாகரன் மகன் ஜெயானந்தோ சசிகலாவை சந்திக்க முடியவில்லை. அதிமுக கோஷ்டிகள் இணைப்பு முயற்சிக்கு திவாகரன் மகன் ஜெயானந்த் வரவேற்பு தெரிவித்திருந்தார். ஆனால் இளவரசி மகன் விவேக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

அப்பல்லோ வீடியோ
அதேபோல் அப்பல்லோவில் ஜெயலலிதாவும் சசிகலாவும் பேசிக் கொள்ளும் வீடியோ ஒன்று இருப்பதாக ஜெயானந்த் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவலை போட்டிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடக்கி வாசிக்கும் ஜெயானந்த்
பின்னர் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்த அத்தனை பதிவுகளையும் ஒட்டுமொத்தமாக நீக்கினார் ஜெயானந்த். தற்போது சமூக வலைதளங்களி0ல் ஜெயானந்த், விவேக் இருவரும் அடக்கி வாசிக்கின்றனர்.

அடுத்தடுத்து தகவல்கள்
இதனிடையே இளவரசிக்கு பெங்களூரு சிறையில் உடல்நலக் குறைவு என ஒரு தகவல் தொடர்ந்து பரபரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இளவரசி மகன் விவேக், அதிமுகவின் துணைப் பொதுச்செயலராகிறார் என்கிற தகவலும் பரவியது.

கொந்தளிக்கும் திவாகரன் தரப்பு
ஆனால் திவாகரன் தரப்போ, திட்டமிட்டே விவேக் கோஷ்டி இப்படி ஒரு தகவலை பரப்புகிறது. தங்கள் மீது அனுதாபம் வரவேண்டும் என்பதற்கான நாடகம்தான் இது. இளவரசி சிறையில் நலமுடன் இருக்கிறார். தினமும் வாக்கிங் சென்று வருகிறார்.. அதிமுகவில் பதவியைப் பெற இன்னும் எத்தனை குறுக்கு வழிகளை கையாள்வார்களோ என குமுறுகிறது திவாகரன் தரப்பு.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications