மாந்தோப்பிற்குள் ரகசிய ‘பான், குட்கா தொழிற்சாலை’... பறந்து சென்று சீல் வைத்த அதிகாரிகள்!
தருமபுரி: தருமபுரி அருகே மாந்தோப்பிற்குள் ரகசியமாக செயல்பட்டு வந்த பான், குட்கா தொழிற்சாலையைக் கண்டுபிடித்து, அதற்கு மாவட்ட உணவுப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் சீல் வைத்துள்ளனர்.
தமிழகத்தில் பான்மசாலா, குட்கா, புகையிலை போன்ற பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஆங்காங்கே ரகசியமாக இந்தப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களுக்கும் இந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக அவ்வப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிடைக்கும் ரகசிய தகவல்கள் அடிப்படையில் இந்த தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன.
அந்தவகையில், தருமபுரி மாவட்டம் முதலைப்பட்டி கிராமத்தில் மாந்தோப்பில் பான் மற்றும் குட்கா பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ரகசியமாக செயல்பட்டு வருவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் விவேகானந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து அந்த கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ளும்படி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் பிருந்தாவுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் பேரில் மருத்துவர் பிருந்தா, உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் கோபிநாத், நாகராஜ், குமணன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் முதலைப்பட்டி கிராமத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அதில், அங்குள்ள மாந்தோப்பு ஒன்றில் பான், குட்கா தயாரிக்கும் ரகசிய ஆலை இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் பான் பொருட்கள் உற்பத்திக்கும், பேக்கிங் பணிக்கும் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர். இந்த சோதனையின் போது, அங்கிருந்த சுமார் 60 லட்சம் மதிப்புள்ள பான் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
.
தற்போது சீல் வைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையானது கடந்த ஒரு மாதமாக இயங்கி வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த தொழிற்சாலையின் உரிமையாளர் யார் என்ற விபரமும் தெரியவில்லையாம்.
தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications